ரூ.75,000 வரை முழு கல்விக் கட்டண விலக்கு.. இந்த ஸ்காலர்ஷிப் தெரியுமா?

Nirankari Rajmata Scheme : இந்த ஸ்காலர்ஷிப்பில் தகுதி பெறும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.75,000 வரை முழு கல்விக் கட்டண விலக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published on: October 1, 2026 at 5:06 pm

சென்னை, அக்.1, 2026: சந்த் நிரங்காரி சாரிடபிள் ஃபவுண்டேஷன் சார்பில் 2026-27ஆம் ஆண்டுக்கான நிரங்காரி ராஜ்மாதா உதவித்தொகைத் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அரசு அங்கீகாரம் பெற்ற மத்திய அல்லது மாநில கல்வி நிறுவனங்களில் போட்டித் தேர்வு மூலம் சேர்க்கை பெற்ற இளநிலை அல்லது முதுநிலை மாணவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். பொறியியல், மருத்துவம், எம்.பி.ஏ/பி.ஜி.டி.எம், கட்டிடக்கலை, சி.ஏ, சி.எஃப்.ஏ, எல்.எல்.பி, பத்திரிகை மற்றும் தகவல் தொடர்பு உள்ளிட்ட தொழில்முறை படிப்புகளுக்கு இந்தத் திட்டம் பொருந்தும்.

தகுதி பெறும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.75,000 வரை முழு கல்விக் கட்டண விலக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தகுதிகளை பூர்த்தி செய்யும் வழக்கமான மாணவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். விண்ணப்பிக்கும் முன் கல்வி நிறுவன அங்கீகாரம் மற்றும் சேர்க்கை தொடர்பான நிபந்தனைகளை சரிபார்க்க வேண்டும்.

இந்த உதவித்தொகைக்கான விண்ணப்பத்தை ஆஃப்லைன் முறையில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 30, 2026 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சென்னை ஐகோர்ட்டில் வேலை வாய்ப்பு.. டிகிரி, என்ஜினீயரிங் தகுதி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com