Rain Alert: தமிழ்நாட்டில் இன்று (செப்.30, 2026) 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Rain Alert: தமிழ்நாட்டில் இன்று (செப்.30, 2026) 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Published on: September 30, 2026 at 1:10 pm
சென்னை, செப்.30, 2026: தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 30) பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மேலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை பெய்யக்கூடிய பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வரை இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்லும்போது உரிய முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய இதர மாவட்டங்கள் மற்றும் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர், விழுப்புரம், கடலூர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். இந்தப் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியிலும் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். அதேநேரத்தில், ஏனைய தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மழை பெய்யும் நேரங்களில் பொதுமக்கள் தேவையின்றி திறந்தவெளியில் இருப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இதற்கிடையே, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் 87.5 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த தகவல்களை சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் வி.ஆர். துரை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : மீண்டும் விசாரணை வளையத்தில் அன்பில் மகேஷ்.. 5 மணி நேரம் சோதனை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com