Gem Granites Veeramani Case: ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆர். வீரமணி தொடர்பான சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், சென்னை போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் மேல் நடவடிக்கையை கைவிட முடிவு செய்திருந்தனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Gem Granites Veeramani Case: ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆர். வீரமணி தொடர்பான சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், சென்னை போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் மேல் நடவடிக்கையை கைவிட முடிவு செய்திருந்தனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Published on: September 24, 2026 at 6:13 pm
சென்னை, செப்.24, 2026: ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆர். வீரமணி தொடர்பான சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், சென்னை போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் மேல் நடவடிக்கையை கைவிட முடிவு செய்திருந்தனர். அப்போது, சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோ போலீசாரிடம் இருந்ததாகவும், சம்பவம் நடந்ததாகக் கூறப்பட்ட வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வீரமணி மற்றும் அந்த வீட்டுடன் தொடர்புடைய சாந்தி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டதுடன், வீட்டுப் பணியாளர்கள், அருகில் உள்ள பஞ்சர் கடை ஊழியர் மற்றும் மருத்துவமனை ஊழியர் உள்ளிட்டோரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. விசாரணையில் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்களில், அந்த வீட்டுக்குள் வெளியாட்கள் அனுமதிக்கப்படவில்லை என்ற தகவல் பொதுவாக இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வீடியோவில் காணப்படும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், சம்பவத்தின் அசல் வீடியோ பதிவு இருந்ததாகக் கூறப்படும் டி.வி.ஆர். சாதனத்திலிருந்து அந்த காட்சிகளை மீட்டெடுக்க முடியவில்லை என்றும் போலீசார் தெரிவித்திருந்தனர். வீடியோவில் இருப்பது தான் இல்லை என்று வீரமணி மறுத்ததாகவும், தன்னுடன் நீண்டகாலமாக தொடர்பில் இருந்த சாந்தி, வீடியோவில் காணப்படும் அறை தனது வீட்டின் ஒரு பகுதியாக இல்லை என்று தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், அப்போது வழக்கை விசாரித்த சென்னை காவல்துறையின் ஆன்ட்டி-வைஸ் ஸ்குவாட், “தற்போதைய நிலையில் மேலும் விசாரணையைத் தொடர போதுமான அடிப்படை இல்லை” என்ற முடிவுக்கு வந்து வழக்கை முடிக்க அறிக்கை தாக்கல் செய்தது.
ஆனால், இந்த முடிவு பின்னர் நீதிமன்றத்தில் கேள்விக்குள்ளானது. சிறப்பு போக்சோ நீதிமன்றம் போலீசாரின் முடிப்பு அறிக்கையை நிராகரித்து, வழக்கில் மேலும் விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், போலீசார் புதிய ஆதாரங்களைத் தேடி நடவடிக்கை மேற்கொண்டனர். தொடர்ந்து, வீரமணி, ஷாந்தி மற்றும் மகேந்திரா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனால், முன்னதாக முடிக்க முயற்சிக்கப்பட்டதாக கூறப்படும் இந்த வழக்கு தற்போது மீண்டும் தீவிர விசாரணையின் கீழ் வந்துள்ளது.
இதையும் படிங்க : ஜெம் கிரானைட்ஸ் வீரமணி போஸ்கோ வழக்கு.. காங்கிரஸ் ரஞ்சன் குமார் விளக்கம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com