ஜம்மு காஷ்மீரில் பழங்குடி மாணவி பாலியல் வன்கொடுமை.. தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு!

Sexual Assault Case: ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பழங்குடியின சிறுமி உயிரிழந்த வழக்கில், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Published on: October 22, 2026 at 3:20 pm

ஜம்மு, அக்.22, 2026: ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பழங்குடியின சிறுமி உயிரிழந்த வழக்கில், தலைமை ஆசிரியர், மருத்துவர்கள் உள்ளிட்ட 15 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 1,000 பக்கங்களுக்கும் அதிகமான இந்தக் குற்றப்பத்திரிகையில் 143 சாட்சிகளின் வாக்குமூலங்கள் இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பள்ளியில் படித்து வந்த சிறுமியை அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் காலித் ஹுசைன் பல மாதங்களாகப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் கர்ப்பமடைந்த சிறுமிக்கு, கர்ப்பத்தைக் கலைக்க மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் முயற்சியின்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு, கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி உயிரிழந்தார்.

சிறுமியின் கர்ப்பம் குறித்த தகவல் வெளியான பிறகும், காவல்துறைக்குத் தெரிவிக்காமல் மறைக்க முயன்றதாக மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் உள்ளூர் சமூகப் பிரமுகர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், சிறுமியின் குடும்பத்தினரை மிரட்டி, காவல்துறையை அணுகவிடாமல் தடுக்க முயன்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் இந்திய நீதிச் சட்டம் (BNS), போக்சோ சட்டம் மற்றும் பட்டியல் சாதியினர், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிசுவின் டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் உள்ளிட்ட சில தடயவியல் அறிக்கைகள் இன்னும் கிடைக்காததால், அவை கிடைத்த பின்னர் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : பிரிட்டன் பெண் சுற்றுலாப் பயணிக்கு பாலியல் தொல்லை: ஒருவர் கைது

காங்கிரஸ், கம்யூனிஸ்ட், கரப்பான்பூச்சி கைகோர்ப்பு.. கவனம் பெறும் பா.ஜ.க எதிர்ப்பு புதிய கூட்டணி!
New Young Leaders

காங்கிரஸ், கம்யூனிஸ்ட், கரப்பான்பூச்சி கைகோர்ப்பு.. கவனம் பெறும் பா.ஜ.க எதிர்ப்பு புதிய கூட்டணி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com