பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் : மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்ட முதல்வர் விஜய்

Breakfast Scheme Expansion : பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தை முதல்வர் விஜய் சென்னையில் இன்று தொடங்கி வைத்து, பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார்.

Published on: September 22, 2026 at 12:37 pm

சென்னை, செப். 22 2026: தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தவும், பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்யவும் செயல்படுத்தப்பட்டு வந்த காலை உணவுத் திட்டம் தற்போது பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என்று மாற்றப்பட்டு 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா சென்னை திருவான்மியூர் காந்திகிராமத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது.

முதல்வர் விஜய் திட்டத்தை தொடங்கி வைத்து, பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார். ஏற்கனவே 1 முதல் 5-ம் வகுப்பு வரை செயல்படுத்தப்பட்டு வந்த இத்திட்டத்தின் மூலம் 37,447 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 19.34 லட்சம் மாணவ-மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். தற்போது 6 முதல் 8-ம் வகுப்பு வரை திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதால், கூடுதலாக 15.30 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.

இந்த விரிவாக்கத்தின் மூலம் மொத்தம் 44,984 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 34.64 லட்சம் மாணவ-மாணவிகள் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள். இதற்காக நடப்பு நிதியாண்டில் கூடுதலாக ரூ.217.63 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காலை உணவுத் திட்டத்திற்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.724 கோடியாக உள்ளது.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்களைத் தவிர்த்து, பிற மாவட்டங்களில் இத்திட்டம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. திங்கட்கிழமை உப்புமா, செவ்வாய்க்கிழமை கிச்சடி, புதன்கிழமை பொங்கல், வியாழக்கிழமை உப்புமா, வெள்ளிக்கிழமை இனிப்பு வகை உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சமையல் கூடங்கள் மற்றும் உணவு பரிமாறும் இடங்களை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரித்து, மாணவர்களுக்கு சூடான, சுவையான மற்றும் ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்கப்படுவதை தொடர்ந்து கண்காணிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: இங்கிலாந்தில் முதலீடு செய்வதே இந்திய நிறுவனங்கள்தான்.. அண்ணாமலை

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com