TVS Apache: TVS Apache, Ronin பைக்குகளில் புதிய அப்டேட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன; பண்டிகை காலத்தை முன்னிட்டு டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
TVS Apache: TVS Apache, Ronin பைக்குகளில் புதிய அப்டேட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன; பண்டிகை காலத்தை முன்னிட்டு டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Published on: September 19, 2026 at 1:59 pm
புதுடெல்லி, செப்.19, 2026: பண்டிகை காலத்தை முன்னிட்டு, டி.வி.எஸ் வேணு குழுமத்தின் அங்கமான டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம் தனது பிரீமியம் மோட்டார்சைக்கிள் வரிசையில் புதிய மேம்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக டி.வி.எஸ் அப்பாச்சி மற்றும் டி.வி.எஸ் ரோனின் (TVS Ronin) மோட்டார்சைக்கிள்களில் செயல்திறன், தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு சார்ந்த புதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட ரைடிங் அனுபவத்தை வழங்க நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
டி.வி.எஸ் அப்பாச்சி மோட்டார்சைக்கிள் வரிசை, டி.வி.எஸ் ரேஸிங்கின் பந்தய அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்திறன், தொழில்நுட்பம் மற்றும் தனித்துவமான வடிவமைப்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பாச்சி மோட்டார்சைக்கிள்கள் டிராக் ஆன் ரோடு என்ற கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வருகின்றன. பந்தய களத்தில் கிடைக்கும் அனுபவம் மற்றும் தொழில்நுட்பத்தை அன்றாட சாலைப் பயணத்திற்கான மோட்டார்சைக்கிள்களில் கொண்டு வருவதே இதன் நோக்கமாகும்.
தற்போது உலகம் முழுவதும் 90 நாடுகளில் 70 லட்சத்துக்கும் அதிகமான டி.வி.எஸ் அப்பாச்சி வாடிக்கையாளர்கள் இருப்பதாக டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அப்பாச்சி ஒரு மோட்டார்சைக்கிள் பிராண்டாக மட்டுமின்றி, சர்வதேச அளவில் செயல்திறன் சார்ந்த ரைடர்களின் சமூகமாகவும் வளர்ந்துள்ளது. மேலும், அப்பாச்சி உரிமையாளர்கள் குரூப் மூலம் இந்தியாவில் 5 லட்சத்துக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். ரைடிங் நிகழ்ச்சிகள், டிராக் அனுபவங்கள் மற்றும் பல்வேறு பிராண்ட் நிகழ்வுகள் மூலம் இந்த சமூகத்தினர் ஒன்றிணைக்கப்படுகின்றனர்.
இந்த பண்டிகை காலத்தை முன்னிட்டு டி.வி.எஸ் அப்பாச்சி ஆர்.டி.ஆர் 160, டி.வி.எஸ் அப்பாச்சி ஆர்.டி.ஆர் 160 4V மற்றும் டி.வி.எஸ் அப்பாச்சி ஆர்.டி.ஆர் 200 4V ஆகிய மாடல்களில் பல்வேறு மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மோட்டார்சைக்கிளின் தனித்துவமான செயல்திறனை மேலும் மேம்படுத்தும் வகையில் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு, கனெக்டிவிட்டி, வசதி, ரைடர் கட்டுப்பாடு மற்றும் வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்த மாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது.
இதனிடையே, டி.வி.எஸ் ரோனின் மோட்டார்சைக்கிளிலும் புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், மிட் மற்றும் டாப் வேரியண்ட்களில் பல்வேறு மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நவீன வடிவமைப்பு, எளிதான செயல்திறன் மற்றும் புதிய தலைமுறை தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்கும் வகையில் ரோனின் உருவாக்கப்பட்டுள்ளது. தனித்துவமான ரைடிங் அனுபவம் மற்றும் சுய வெளிப்பாட்டை விரும்பும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட டி.வி.எஸ் ரோனின் அணுகுமுறை தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருவதாகவும், உலகளவில் 2 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்ட சமூகமாக வளர்ந்துள்ளதாகவும் டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : AI தொழில்நுட்பம் சுரங்கத் துறையை வெளிப்படையாக மாற்றி உள்ளது.. அமைச்சர் சஸ்மித் பத்ரா
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com