UGC NET KEY : UGC NET ஜூன் 2026 தேர்வின் மறுதேர்வுக்கான ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் பாடங்களின் தற்காலிக விடைக்குறிப்புகளை NTA வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் செப்டம்பர் 13-ம் தேதி வரை ஆன்லைனில் ஆட்சேபனை தெரிவிக்கலாம்.
UGC NET KEY : UGC NET ஜூன் 2026 தேர்வின் மறுதேர்வுக்கான ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் பாடங்களின் தற்காலிக விடைக்குறிப்புகளை NTA வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் செப்டம்பர் 13-ம் தேதி வரை ஆன்லைனில் ஆட்சேபனை தெரிவிக்கலாம்.

Published on: September 12, 2026 at 12:51 pm
புதுடெல்லி, செப். 12, 2026: UGC NET ஜூன் 2026 தேர்வின் மறுதேர்வுக்கான ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் பாடங்களின் தற்காலிக விடைக்குறிப்புகளை தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ளது. மறுதேர்வு எழுதியுள்ள தேர்வர்கள், வெளியிடப்பட்டுள்ள விடைக்குறிப்புகளை சரிபார்த்து, ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் ஆன்லைன் மூலம் தெரிவிக்கலாம்.
தேர்வர்கள் அதிகாரப்பூர்வ UGC-NET இணையதளம் வாயிலாக தற்காலிக விடைக்குறிப்புகளை பார்வையிட்டு, வரும் 13-ம் தேதி வரை ஆட்சேபனைகளை பதிவு செய்யலாம். இதற்கான நடைமுறையை NTA அறிவித்துள்ளது. தேர்வர்கள் தங்களது கேள்விகளுக்கான விடைகளை கவனமாக சரிபார்த்து, உரிய ஆதாரங்களுடன் ஆட்சேபனைகளை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஏன் UGC NET மறுதேர்வு நடத்தப்பட்டது?
UGC NET தேர்வில் ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் ஆகிய 3 பாடங்களுக்கான வினாத்தாள்களில் பல்வேறு பிழைகள் இருப்பதாக தேர்வர்களிடமிருந்து புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து இந்த 3 பாடங்களுக்கும் மறுதேர்வு நடத்த NTA முடிவு செய்தது. அதன்படி, ஆங்கிலம் மற்றும் வணிகவியல் பாடங்களுக்கான மறுதேர்வு செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற்றது.
சமூகவியல் பாடத்திற்கான மறுதேர்வு செப்டம்பர் 10-ம் தேதி நடைபெற்றது. தற்போது 3 பாடங்களுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தேர்வர்கள் தங்களது ஆட்சேபனைகளை செப்டம்பர் 13-ம் தேதி வரை பதிவு செய்யலாம். ஆட்சேபனைகள் பரிசீலிக்கப்பட்ட பின்னர் இறுதி விடைக்குறிப்பு மற்றும் அடுத்தகட்ட தேர்வு முடிவுகள் தொடர்பான அறிவிப்புகளை NTA வெளியிடும்.
இதையும் படிங்க : உத்தரப் பிரதேசத்தில் அசிஸ்டன்ட் ப்ரொபசர் பணி.. 1,936 காலி பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com