காவிரி தமிழ்நாட்டின் உரிமை; ஒருபோதும் விட்டு தரமாட்டோம்.. முதலமைச்சர் விஜய்

Tamilnadu Assembly Session: “காவிரி தமிழ்நாட்டின் உரிமை; ஒருபோதும் விட்டு தரமாட்டோம்” என தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.

Published on: August 7, 2026 at 9:52 pm

சென்னை, ஆக.7, 2026: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில், காவிரி மற்றும் மேகதாது அணை விவகாரம் குறித்து முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தெளிவுபடுத்தினார். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் காவிரி பிரச்சினையைச் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மான உரையாக முன்வைத்ததற்கு பதிலளித்த அவர், “காவிரி உரிமை தமிழ்நாட்டின் உரிமை; அதை ஒருபோதும் விட்டு தரமாட்டோம்” என்று வலியுறுத்தினார்.

முதலமைச்சர், மேகதாது அணை தொடர்பாக மாநிலங்களவையில் ஒன்றிய ஜல்சக்தி இணை அமைச்சர் முழு விவரங்களை குறிப்பிடவில்லை என்று தெரிந்ததும், காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை குறிப்பிட்டு பிரதமருக்கு கடிதம் அனுப்பியதாக தெரிவித்தார். “மேகதாது அணையை கட்டுவதிலும் காவிரி உரிமைப் பிரச்சினைகளிலும் இந்த அரசு தமிழ்நாட்டின் உரிமையை ஒருபோதும் விட்டு தராது. அதுதான் நம் நிலைபாடு,” என்றார்.

அவர் மேலும், “கர்நாடகா செல்லும் திட்டம், பிரச்சினை தொடர்பாக நேர்மறையான அறிகுறிகள் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான். ஒருவேளை அந்த சந்திப்பில் அவமானம் நேர்ந்தாலும், தமிழ்நாட்டு மக்களுக்காக அதைத் தாங்கத் தயார்,” என்று குறிப்பிட்டார்.

குருவை சாகுபடிக்கு நிவாரணம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும், அரசியலே நாங்கள்தான் என்று சொல்லும் சிலருக்கு இது தெரியாமல் போனது ஆச்சரியமாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். “தினமும் செய்தித்தாளைப் படித்திருந்தால் நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரிந்திருக்கும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

மொத்தத்தில், காவிரி பிரச்சினை உணர்வு ரீதியானது என்றும், அதனை அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தும் எண்ணமே இல்லையெனவும், தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாப்பதே அரசின் நிலைப்பாடு என முதலமைச்சர் தெளிவுபடுத்தினார்.

இதையும் படிங்க : தி.மு.க ஆட்சியில் டாஸ்மாக் துறையில் ஊழல்.. தமிழக சட்டப்பேரவையில் காரசார விவாதம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com