Ponmudi: தமிழ் சமயங்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், தி.மு.க. மூத்தத் தலைவர் பொன்முடிக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட பிறப்பித்துள்ளது.
Ponmudi: தமிழ் சமயங்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், தி.மு.க. மூத்தத் தலைவர் பொன்முடிக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட பிறப்பித்துள்ளது.

Published on: August 6, 2026 at 3:38 pm
சென்னை, ஆக.6, 2026: சென்னையில் நடைபெற்ற திமுக இளைஞர் அணியின் அன்பக நிகழ்ச்சியில் சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
முன்னாள் அமைச்சர் பொன்முடி, வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், நீதிபதி ஜி.கே. இளந்திரையன், அவரது மனுவை தள்ளுபடி செய்து, வழக்கை தொடர அனுமதி அளித்தார். இதனால், வழக்கு மீண்டும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது, பொன்முடி தரப்பில் நேரில் ஆஜராகாமல் விலக்கு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், நீதிபதி சவுந்திர பாண்டியன் அந்த மனுவை நிராகரித்தார். இதனால், பொன்முடி செப்டம்பர் 2 ஆம் தேதிக்குள் காவல்துறையால் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கு, மத உணர்வுகளை புண்படுத்துதல் மற்றும் வெறுப்பு பேச்சு தொடர்பான பிரிவுகளின் கீழ் தொடரப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
இதையும் படிங்க : ஜில் ஜில் ஆகப்போகும் 16 மாவட்டங்கள் : எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com