ஜில் ஜில் ஆகப்போகும் 16 மாவட்டங்கள் : எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

Tamil Nadu Rain Alert: தமிழகத்தில் சென்னை, திருச்சி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Published on: August 6, 2026 at 11:21 am

சென்னை, ஆகஸ்ட் 06, 2026 : சென்னையை அடுத்த பகுதிகளில் நிலவும் வளிமண்டலச் சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களிலும், திருச்சி உள்ளிட்ட உள்மாவட்டங்களிலும் பரவலாக மழை பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, கரூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகப் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

தலைநகர் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸாகவும் பதிவாக வாய்ப்புள்ளது. மாநிலம் முழுவதிலும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும்.

கடல்சார் எச்சரிக்கையாக, குமரிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். அதேபோல், தெற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் (இடையிடையே 65 கி.மீ), அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும் (இடையிடையே 55 கி.மீ) சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், அப்பகுதிகளுக்குச் செல்லும் மீனவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : பவர்கட் பிரச்னைக்கு தீர்வு.. மின்சாரத் துறைக்கு ரூ.15,828 ஒதுக்கீடு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com