Ranveer Singh: நடிகர் ரன்வீர் சிங்- நடிகை தீபிகா படுகோன் தம்பதிக்கு இரண்டாவது குழந்தையாக பெண் குழந்தை பிறந்துள்ளது.
Ranveer Singh: நடிகர் ரன்வீர் சிங்- நடிகை தீபிகா படுகோன் தம்பதிக்கு இரண்டாவது குழந்தையாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

Published on: September 20, 2026 at 1:19 pm
மும்பை, செப்.20, 2026: நடிகர் ரன்வீர் சிங்- நடிகை தீபிகா படுகோன் தம்பதிக்கு இரண்டாவது குழந்தையாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கூட்டாக பதிவிட்டு அறிவித்துள்ளனர்.
சனிக்கிழமை (செப்.19 வெளியான இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் சமூக வலைதளங்களில் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் தம்பதிக்கு ஏற்கனவே துவா என்ற பெண் குழந்தை உள்ள நிலையில், தற்போது அவர்களது குடும்பத்தில் மேலும் ஒரு பெண் குழந்தை இணைந்துள்ளது.
ரன்வீர் சிங் நடித்த ‘துரந்தர்’ திரைப்படத்தை இயக்கிய ஆதித்யா தார், தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து, “முதலில் லட்சுமி வந்தார், இப்போது சரஸ்வதியும் வந்துவிட்டார். உங்கள் இருவருக்காக மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். குடும்பத்தில் மற்றொரு குட்டி தேவதை வந்துள்ளார். உலகில் உள்ள அனைத்து அன்பும் மகிழ்ச்சியும் அவருக்கு கிடைக்க இறைவன் ஆசீர்வதிக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். அவரது வாழ்த்து பதிவு ரசிகர்களின் கவனத்தையும் பெற்றுள்ளது.
நடிகை கீர்த்தி சனோனும் ரன்வீர் மற்றும் தீபிகா தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், “ஆஹா! உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள். துவாவுக்கு ஒரு தங்கை கிடைத்துவிட்டார். இது மிகப்பெரிய ஆசீர்வாதம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மூத்த நடிகர் அனில் கபூரும் இந்த மகிழ்ச்சியான செய்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். “வாழ்த்துகள், பெண்கள்தான் சிறந்தவர்கள்!” என அவர் குறிப்பிட்டுள்ளார். அனில் கபூரின் மகளும் நடிகையுமான சோனம் கபூர், “என்ன ஒரு கனவு… வாழ்த்துகள்” எனத் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். இதேபோல் பாலிவுட்டைச் சேர்ந்த மேலும் பல நட்சத்திரங்களும் சமூக வலைதளங்களில் தங்களது அன்பையும் வாழ்த்துகளையும் ரன்வீர் சிங் – தீபிகா படுகோன் தம்பதியிடம் பகிர்ந்து வருகின்றனர்.
ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் தம்பதிக்கு இரண்டாவது குழந்தையாக பெண் குழந்தை பிறந்துள்ள செய்தி ரசிகர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் தங்களது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான முக்கிய தருணங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்த இந்த நட்சத்திரத் தம்பதி, தற்போது தங்களது குடும்பத்தில் இணைந்துள்ள புதிய உறுப்பினரின் வருகையையும் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர். அவர்களுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : பிரித்வி ராஜ், கரீனா கபூர் படம்.. தாய்ரா 2ம் நாள் வசூல்.. சாதித்ததா? சறுக்கியதா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com