கையில் சிகரெட், நெஞ்சில் டாட்டூ.. மிரட்டல் தோற்றத்தில் வித்யா பாலன்!

Vidya Balan in Jailer 2: சூப்பர் ஸ்டாரின் ஜெய்லர்-2 திரைப்படத்தில் காந்தா என்ற கதாபாத்திரத்தில் நடிகை வித்யா பாலன் நடித்துள்ளார்.

Published on: September 21, 2026 at 6:53 pm

சென்னை, செப்.21, 2026: ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிகை வித்யா பாலன் நடிக்கும் கதாபாத்திரத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் வித்யா பாலன் ‘காந்தா’ என்ற கதாபாத்திரத்தில் நடிப்பது தெரியவந்துள்ளது. முதல் தோற்றக் காட்சியில் அவர் ரஜினிகாந்துடன் நேருக்கு நேர் மோதும் வகையிலான காட்சியில் இடம்பெற்றுள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம், 2023-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘ஜெயிலர்’ படத்தின் தொடர்ச்சியாக உருவாகி வருகிறது.

வித்யா பாலனின் முதல் தோற்றக் காட்சியில், அவர் படிக்கட்டுகளில் இருந்து கம்பீரமாக கீழே இறங்கி வருகிறார். நீல நிற சேலை அணிந்திருக்கும் அவர், கையில் சிகரெட்டுடன் தோன்றுகிறார். பின்னர் ரஜினிகாந்துடன் பதற்றம் நிறைந்த நேருக்கு நேர் மோதல் போன்ற காட்சி இடம்பெறுகிறது. அந்த நேரத்தில் சிகரெட் புகையை வெளியேற்றியபடி அவர் பார்க்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள பின்னணி இசை, இந்தக் காட்சிக்கு கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

‘ஜெயிலர் 2’ படத்தில் ஏற்கனவே நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தார். அவர் ‘திலீப்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சுராஜின் முதல் தோற்றக் காட்சியில், காரில் இருந்து இறங்கி சுருட்டுப் புகைத்தபடி தோன்றுகிறார். மேலும், புதிய தோற்றத்தில் அவர் காட்சியளிக்கும் அந்த வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. தற்போது வித்யா பாலனின் கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

நெல்சன் திலீப்குமார் எழுதி இயக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். 2023-ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினிகாந்த் ‘டைகர்’ முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்திலும், ரம்யா கிருஷ்ணன் விஜயா பாண்டியன் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். அந்தப் படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் இரண்டாம் பாகத்திலும் இருவரும் கணவன்-மனைவி கதாபாத்திரங்களில் மீண்டும் நடிக்கின்றனர்.

மேலும், யோகி பாபு, மிர்ணா, ரித்விக் உள்ளிட்டோர் தங்களது முந்தைய கதாபாத்திரங்களைத் தொடர்கின்றனர். தற்போது வித்யா பாலன் மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோரின் கதாபாத்திரங்களின் முதல் தோற்றங்கள் வெளியாகியுள்ள நிலையில், படத்தின் கதை மற்றும் இவர்களின் கதாபாத்திரங்கள் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி தசரா பண்டிகை வார இறுதியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதையும் படிங்க : பாக்ஸ்ஆபிஸில் தடுமாறும் கரீனா- பிரித்வி படம்.. இறுதி வசூல் அதிகரிக்குமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com