Mammootty: இயக்குநர் நிதிஷ் சஹாதேவ் இயக்கத்தில், நடிகர் மம்முட்டி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்கியுள்ளது.
Mammootty: இயக்குநர் நிதிஷ் சஹாதேவ் இயக்கத்தில், நடிகர் மம்முட்டி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்கியுள்ளது.

Published on: July 31, 2026 at 3:07 pm
Updated on: July 31, 2026 at 3:11 pm
சென்னை, ஜூலை 31, 2026: மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டின் காரைக்குடியில் இன்று தொடங்கியுள்ளது. இயக்குநர் நிதிஷ் சஹாதேவ் இயக்கும் இந்தப் படத்தை மம்மூட்டி கம்பனி நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது இந்தப் படம் தற்காலிகமாக மம்மூட்டி கம்பெனி புரேஷன் எண்9 என்ற பெயரில் குறிப்பிடப்பட்டு வருகிறது.
படப்பிடிப்பு தொடங்கியதை தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளது. “காரைக்குடியில் இன்று முதல் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த புதிய பயணத்திற்கு உங்கள் அன்பும் ஆதரவும் தேவை” என்று பதிவிட்டதுடன், முதல் நாள் படப்பிடிப்பின் பின்னணிக் காட்சிகளையும் (BTS) வெளியிட்டுள்ளது.
நடிகர் ஜீவா நடித்த ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, மம்முட்டியை இயக்க உள்ளதாக நிதிஷ் சஹாதேவ் கடந்த ஆண்டு அறிவித்திருந்தார். இந்தப் படத்தின் திரைக்கதையை அனுராஜ் ஓ.பி. மற்றும் நிதிஷ் சஹாதேவ் இணைந்து எழுதியுள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜிம்ஷி காலித் பணியாற்றுகிறார்.
இப்படம் இரண்டு வாரங்களுக்கு முன்பு பிரம்மாண்ட பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்ட நிலையில், தற்போது காரைக்குடியில் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், நடிகர் துல்கர் சல்மான் பிறந்தநாளன்று இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: இரட்டிப்பு மகிழ்ச்சி.. இரட்டை குழந்தைகளுக்கு அப்பாவான நடிகர் கவின்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com