“யாரையும் நாங்கள் அழைக்கவில்லை”… ‘குதிரை பேரம்’ குற்றச்சாட்டுக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதிலடி!

Defection Row : ‘குதிரை பேரம்’ குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல்குமார், “எம்எல்ஏக்களை பணம் கொடுத்து வாங்கினால்தான் அது குதிரை பேரம். யாரையும் நாங்கள் அழைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

Published on: July 14, 2026 at 1:23 pm

Updated on: July 14, 2026 at 2:00 pm

சென்னை, ஜூலை 14 2026: தமிழக வெற்றிக் கழகத்தில் பிற கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இணைவது தொடர்பாக எழுந்துள்ள ‘குதிரை பேரம்’ குற்றச்சாட்டுக்கு அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார். யாரையும் பணம் கொடுத்து அல்லது அழுத்தம் கொடுத்து தங்கள் கட்சியில் சேர்க்க முயற்சிக்கவில்லை என்றும், தங்களாக முன்வந்து இணைவதை குதிரை பேரம் என கூற முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நிர்மல்குமார் கூறுகையில், “எம்எல்ஏக்களை பணம் கொடுத்து வாங்க முயற்சி செய்தால்தான் அது குதிரை பேரம். ஆனால், மு.க.ஸ்டாலின் அல்லது எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றுக்கொள்ள முடியாமல் தாங்களாகவே பதவி விலகி வருபவர்களின் முடிவை குதிரை பேரம் என்று கூற முடியாது” என்றார்.

மேலும், “யாரையும் நாங்கள் அழைக்கவில்லை. தங்களது விருப்பத்தின் பேரில் பதவி விலகிவிட்டு வருபவர்களை தவெகவில் சேர்க்க முடியாது என்று எப்படி சொல்ல முடியும்?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார். கட்சியில் இணைவது என்பது தனிநபரின் ஜனநாயக உரிமை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், திமுக, அதிமுக கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளர்களாக ராஜேந்திர பாலாஜியும், அனிதா ராதாகிருஷ்ணனும்தான் இருக்கப்போகிறார்கள் என நினைக்கிறேன் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க ‘தாய்மாமன்’ தங்க மோதிரம் திட்டம்… 4.41 லட்சம் மோதிரங்கள் கொள்முதல்; டெண்டர் வெளியிட்ட தமிழக அரசு

“யாரையும் நாங்கள் அழைக்கவில்லை”… ‘குதிரை பேரம்’ குற்றச்சாட்டுக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதிலடி! Defection Row

“யாரையும் நாங்கள் அழைக்கவில்லை”… ‘குதிரை பேரம்’ குற்றச்சாட்டுக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதிலடி!

‘3 நிமிடங்களில் படகு தலைகீழானது’… வியட்நாம் படகு விபத்தில் உயிர் தப்பிய தமிழரின் பதறவைக்கும் நிமிடங்கள்! Vietnam Boat Tragedy

‘3 நிமிடங்களில் படகு தலைகீழானது’… வியட்நாம் படகு விபத்தில் உயிர் தப்பிய தமிழரின்

மக்கள் சேவைக்கு புதிய முகவரி! பெரம்பூரில் எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் விஜய் Perambur MLA Office

மக்கள் சேவைக்கு புதிய முகவரி! பெரம்பூரில் எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் விஜய்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com