Indian Overseas Bank jobs : இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அப்ரண்டீஸ் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Indian Overseas Bank jobs : இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அப்ரண்டீஸ் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Published on: July 7, 2026 at 8:59 pm
சென்னை, ஜூலை 7, 2026: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank) அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 750 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 200 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 20 ஜூலை 2026க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு 20 முதல் 28 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு விதிகளின்படி எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகள், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை வயது தளர்வு வழங்கப்படுகிறது.
ஊக்கத்தொகை ரூ.14,000 முதல் ரூ.15,500 வரை வழங்கப்படும். தேர்வு முறை கணினி வழித் தேர்வு அடிப்படையில் நடைபெறும். இதில் பொது அறிவு, வங்கி சார்ந்த கேள்விகள், கணிதம் மற்றும் திறனறி, ஆங்கிலம் மற்றும் கணினி ஆகிய பகுதிகளில் இருந்து தலா 25 கேள்விகள் என மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும். தேர்வு 100 மதிப்பெண்களுக்கு ஒரு மணி நேர கால அளவில் நடைபெறும்.
விண்ணப்பிக்க [NATS portal] (https://nats.education.gov.in/) மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ.800, பெண்களுக்கு ரூ.600, எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க :டி.என்.பி.எஸ்.சி தேர்வில் சாதித்த விஷ்ணு பிரியா.. நேரில் வாழ்த்திய கு. ராமகிருட்டிணன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com