சவுத் இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு.. ஆண்டுக்கு ரூ.5.14 லட்சம் சம்பளம்!

South Indian Bank Recruitment: சவுத் இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு ஆண்டுக்கு ரூ.5.14 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறது.

Published on: October 19, 2026 at 3:39 pm

சென்னை, அக்.19, 2026: சவுத் இந்தியன் வங்கியில் (South Indian Bank) ஜூனியர் ஆபிசர் (ஆபரேஷன்ஸ்) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வங்கியில் வேலை தேடும் தகுதியான பட்டதாரிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், வங்கி அல்லது வங்கி சாரா நிதி நிறுவனங்களில் (NBFC) குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 28 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது தளர்வு வழங்கப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.5.14 லட்சம் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணி ஆரம்பத்தில் 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படும். தேர்வு நடைமுறையில் குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு இடம்பெறலாம்.

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் சவுத் இந்தியன் வங்கியின் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையதளமான recruit.southindianbank.bank.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசி நாள் 2026 அக்டோபர் 27. விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தகுதிகள் மற்றும் பிற நிபந்தனைகளைச் சரிபார்ப்பது அவசியம்.

இதையும் படிங்க :தமிழக அரசுப் பள்ளிகளில் மாதந்தோறும் வினாடி வினா போட்டி.. ‘சொல்! வெல்!’ திட்டம் அறிமுகம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com