இடையூறுகள் இருக்காது, 5 ஆண்டுகள் த.வெ.க.வுக்கு உறுதியான ஆதரவு.. தொல். திருமாவளவன்!

Thirumavalavan: தமிழக வெற்றிக் கழக அரசுக்கு 5 ஆண்டுகள் உறுதியான ஆதரவு வழங்கப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனர்- தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Published on: June 30, 2026 at 6:20 pm

Updated on: June 30, 2026 at 9:39 pm

மதுரை, ஜூன் 30, 2026: தமிழக வெற்றிக் கழகம் நாளை (ஜூலை 1, 2026) நடத்தவுள்ள தோழமைக் கட்சிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதிகாரப்பூர்வமாக பங்கேற்கும் என்று அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தற்போதைய அரசியல் சூழல், தவெக அரசுக்கான ஆதரவு மற்றும் நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கம் குறித்து கருத்து தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, “தவெக அரசுக்கு ஆதரவு அளித்த அனைத்து கட்சிகளும் தங்களது நிலைப்பாட்டில் இருந்து மாற வாய்ப்பில்லை. குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை த.வெ.க.வுக்கு அளித்த வாக்குறுதிகளை கட்டாயம் காப்பாற்றும். காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இணைந்து, உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் வரை உறுதியான உறவைத் தொடரும்” என்றார்.

மேலும், “இடதுசாரிகள் மற்றும் விசிக ஆகிய இரு தரப்பும் இந்த த.வெ.க. அரசு 5 ஆண்டுகள் முழுமையாகத் தொடர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். எனவே, இந்த ஆட்சிக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் 5 ஆண்டுகள் வெற்றிகரமாக இயங்கும்” என்று திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்தார். நாளைய கூட்டம் தேநீர் விருந்தாக மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் கட்சித் தலைவர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விசிக சார்பில், திருமாவளவன், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், வன்னியரசு, ஜோதிமணி மற்றும் பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். புதிய கூட்டணி குறித்த அறிவிப்புகள் கூட்டத்திற்குப் பிறகே வெளியாகும், முன்கூட்டியே யூகமாக எதுவும் கூற முடியாது என அவர் தெளிவுபடுத்தினார்.

அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து பதவி விலகுவது குறித்து எழுந்த கேள்விக்கு பதிலளித்த அவர், “இதுவரை 6 எம்.எல்.ஏ-க்கள் விலகியிருப்பது சாதாரணம் அல்ல, அது அக்கட்சியின் உட்கட்சி முரண்பாட்டைக் காட்டுகிறது. ஊடகங்கள் யூகங்களின் அடிப்படையில் விவாதிக்காமல், அதிமுகவுக்குள் நடக்கும் உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டும்” என்றார். மேலும், இந்தியா முழுவதும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருவதைப் பற்றி கவலை தெரிவித்தார்.

இதையும் படிங்க : ஆளுநரை சந்தித்தது ஏன்? காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன் விளக்கம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com