Dayalu Ammal Health : கருணாநிதியின் துணைவியாரும், மு.க ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாளுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
Dayalu Ammal Health : கருணாநிதியின் துணைவியாரும், மு.க ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாளுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

Published on: June 30, 2026 at 6:33 pm
சென்னை, ஜூன் 30, 2026: திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல்நல குறைவு காரணமாக இன்று இரவு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 95 வயதான அவர், வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நல பிரச்சினையால் சிகிச்சை பெற்று வருகிறார் என மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது.
தயாளு அம்மாளை முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவரும் பேரனுமான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினர் நேரில் சென்று பார்த்தனர். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2018 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு, தயாளு அம்மாள் உடல்நிலை குறைவு காரணமாக அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பி வந்துள்ளார். வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் மருத்துவர்கள் கவனித்து வருகின்றனர்.
தற்போதைய அனுமதி செய்தி, திமுக வட்டாரத்திலும், அவரது குடும்பத்தினரிடமும் கவலை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்து வருவதாகவும், உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ஆளுநரை சந்தித்தது ஏன்? காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன் விளக்கம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com