தி.மு.க. எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு.. பரபரப்பு தகவல்கள்!

Case Filed Against Anita Radhakrishnan : தி.மு.க. எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Published on: June 24, 2026 at 12:57 pm

தூத்துக்குடி, ஜூன் 24, 2026: தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேசியதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர், முதலமைச்சர் நடிகையுடன் வீட்டில் இருப்பதாக ஒருமையில் பேசியிருந்தார்.

இந்த உரை கலவரத்தை தூண்டும் வகையில் இருந்ததாகக் கூறி, தவெக நிர்வாகிகள் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், ஆத்தூர் காவல் நிலையத்தில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலமைச்சர் விஜயை குறித்த இந்தக் கருத்துகள், அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. பொதுக்கூட்ட மேடையில் கூறப்பட்ட இந்த உரை, சட்டரீதியான நடவடிக்கைக்கு வழிவகுத்துள்ளது. போலீசார், வழக்கை பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர்.

இதையும் படிங்க : மீண்டும் தந்தை-மகன் கூட்டணி.. ராமதாஸ், அன்புமணி இன்று சந்திப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com