தமிழகத்துக்கு இடியுடன் மழை.. ராஜஸ்தான், ஒடிசாவுக்கு ஆரஞ்சு அலர்ட்!

Rain Alert: ராஜஸ்தான் மற்றும் ஒடிசாவில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published on: August 8, 2026 at 4:22 pm

Updated on: August 8, 2026 at 4:23 pm

புதுடெல்லி, ஆக. 8 2026: இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD), இன்று ராஜஸ்தான் மற்றும் ஒடிசாவில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேபோல், லட்சத்தீவு, வட உள் கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை எச்சரிக்கை

அடுத்த 2 முதல் 3 நாட்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. குறிப்பாக பீகார், சத்தீஸ்கர், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம், ஒடிசா மற்றும் ராஜஸ்தானில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழையுடன் இடி, மின்னல் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இமயமலை மாநிலங்கள் முதல் வடகிழக்கு வரை

அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா மற்றும் சிக்கிம் மாநிலங்களிலும் இதேபோன்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் வரும் 10-ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது.

ஆந்திராவில் பலத்த காற்று.. டெல்லியில் மிதமான மழை!

ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த தரைக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, டெல்லி-NCR பகுதியில் நாள் முழுவதும் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது.

இதையும் படிங்க: மழை வெள்ளத்தில் மிதந்த டெல்லி.. ரெட் அலர்ட் விடுப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com