தமிழக முதல்வர் விஜய் கூட்டிய எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்.. புறக்கணிக்கும் திமுக, அதிமுக!

Delimitation Meet : தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் இன்று நடைபெறும் எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்தை திமுக, அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.

Published on: August 8, 2026 at 1:49 pm

சென்னை, ஆக. 8, 2026: தமிழகத்தில் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் இன்று (ஆகஸ்ட் 8) சென்னை கலைவாணர் அரங்கில் மாலை 3 மணிக்கு எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. மத்திய அரசின் முன்மொழியப்பட்ட தொகுதி மறுவரையறையால் தமிழகத்தின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்க தமிழக அரசு அழைப்பு விடுத்திருந்தது.

கூட்டத்தை புறக்கணிக்கும் திமுக, அதிமுக

இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என திமுக மற்றும் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் முந்தைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும், முதல்வர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டம் அரசியல் நோக்கம் கொண்டது என்றும் திமுக தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் மசோதா அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட்ட பிறகே அதுகுறித்த தங்களது நிலைப்பாட்டை முடிவு செய்வோம் என அக்கட்சியின் மூத்த தலைவர் ஆர். எஸ். பாரதி கூறியுள்ளார். அதிமுக எம்.பி.க்களும் கூட்டத்தில் பங்கேற்கமாட்டார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேமுதிக, மநீமை நிலைப்பாடு என்ன?

தேமுதிகவும் முதல்வர் விஜய் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளது. அக்கட்சியின் எம்.பி. சுதீஷ் கூட்டத்தில் கலந்துகொள்ளமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மக்கள் நீதி மய்யம் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள கமல்ஹாசன் அமெரிக்காவில் இருப்பதால் கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இதனால், தமிழக எம்.பி.க்களுடன் நடத்தப்பட உள்ள முதல்வரின் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய எதிர்க்கட்சிகளின் பங்கேற்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

தொகுதி மறுவரையறை மசோதா

2026 தொகுதி மறுவரையறை மசோதா முன்மொழிவின்படி, மக்களவையின் தற்போதைய 543 தொகுதிகள் சுமார் 50% அதிகரித்து 816 ஆக உயரக்கூடும். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் அளித்த விளக்கத்தின்படி, தமிழகத்தின் தற்போதைய 39 தொகுதிகள் 59 ஆக அதிகரிக்கலாம்; மொத்த மக்களவை தொகுதிகளில் தமிழகத்தின் பங்கு 7.18%-ல் இருந்து சுமார் 7.23% ஆக இருக்கும். தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையாது, மாறாக அவற்றின் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: காவிரி தமிழ்நாட்டின் உரிமை; ஒருபோதும் விட்டு தரமாட்டோம்.. முதலமைச்சர் விஜய்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com