கத்தாரில் தீ விபத்து.. திருநெல்வேலியை சேர்ந்த 3 இளைஞர்கள் உயிரிழப்பு!

Qatar Fire Accident : கத்தாரில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

Published on: June 23, 2026 at 7:47 pm

திருநெல்வேலி, ஜூன் 23, 2026: கத்தார் நாட்டின் ராஸ் லஃபான் தொழிற்பேட்டைப் பகுதியில் கடந்த 21-ஆம் தேதி இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது. நெல்லை மாவட்டம் ராதாபுரம் வட்டம் சிதம்பராபுரம் யாக்கோபுரத்தைச் சேர்ந்த பபித் (26), பணகுடி பகுதி சிவகாமிபுரத்தைச் சேர்ந்த சஜித்குமார் (25) மற்றும் அழகியநம்பியாபுரத்தைச் சேர்ந்த சுவின் (24) ஆகியோர் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தவர்கள் ஆவர்.

இளைஞர்களின் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலையும் வேதனையையும் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அவர், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களை விரைந்து தமிழகத்திற்குக் கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் க. தென்னரசு அவர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் கத்தாரில் உள்ள இந்தியத் தூதரகம் மூலமாக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த விபத்து தொடர்பான கூடுதல் விவரங்களை அறிந்து கொள்வதற்காக, அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் 1800 309 3793 என்ற எண்ணிலும், வெளிநாட்டிலிருந்து தொடர்புகொள்பவர்கள் +91 80 6900 9900, +91 80 6900 9901 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : திருநெல்வேலி டூ காசி.. புனித யாத்திரை ரயில் பயணம் எப்போது தொடங்கும்? முழு விவரம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com