நீட் தேர்வில் முக்கிய மாற்றம்.. அடுத்த ஆண்டு அமல்.. தர்மேந்திர பிரதான்

NEET Exam 2027 update: அடுத்த ஆண்டு (2027) முதல் நீட் தேர்வு கணினி முறையில் நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

Published on: June 23, 2026 at 7:53 pm

புதுடெல்லி, ஜூன் 23, 2026: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நீட் (நீட்) தேர்வில் வினாத்தாள் கசிவு விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அடுத்த ஆண்டு முதல் தேர்வு கணினி வழி முறைக்கு மாற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். வினாத்தாள் மோசடிக் கும்பலை ஒழிக்கவும், தேர்வின் போது மாணவர்களுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தடுக்கவும் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறினார்.

பிரதான், ‘இந்தியா டுடே’ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், வினாத்தாள் மோசடிக் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். மேலும், மாணவர்களின் நலனை முன்னிறுத்தி, தேர்வு பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறித்து அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். மாணவர்களிடையே அச்சத்தை விதைத்து, அரசியல் ஆதாயம் பெற முயற்சிக்கிறார் என்று குற்றம் சாட்டிய பிரதான், ‘துக்டே துக்டே’ சக்திகள் செயல்படுகின்றன என்ற கருத்தையும் வெளிப்படுத்தினார்.

இந்த விவகாரம், நீட் தேர்வின் எதிர்கால வடிவமைப்பில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் நிலையில், மாணவர்களும் பெற்றோர்களும் அதிக கவனத்துடன் எதிர்பார்க்கின்றனர். கணினி வழி தேர்வு நடைமுறைக்கு மாறுவதால், வினாத்தாள் கசிவு மற்றும் மோசடிகள் குறையும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

இதையும் படிங்க உயர்கல்வி துறையில் புதிய அணுகுமுறைகள் அவசியம்.. கோவா சர்வதேச அமைதி பல்கலைக்கழகம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com