வந்தாச்சு தாய்மாமன் தங்க மோதிரம்.. ரூ.735 கோடி நிதி ஒதுக்கீடு

Thaimaman Gold Ring Scheme : தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கு ரூ.735 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Published on: June 23, 2026 at 7:58 pm

சென்னை, ஜூன் 23, 2026: தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட “தாய்மாமன் தங்க மோதிரம்” திட்டம், வரும் செப்டம்பர் 15ஆம் தேதி தமிழக முதலமைச்சரால் துவக்கி வைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக 755 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ நல்வாழ்வுத் துறை சார்பில் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த திட்டத்தின் அடிப்படையில், ஜூன் 22ஆம் தேதி முதல் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கப்படும். குழந்தைகளின் பிறப்பை நினைவுகூரும் வகையில், குடும்பங்களுக்கு இந்த மோதிரம் வழங்கப்படுவதால், சமூகத்தில் ஒரு தனித்துவமான அடையாளமாக அமையும் என்று அரசு தெரிவித்துள்ளது.

முதலமைச்சர், இந்த திட்டம் குடும்பங்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பதோடு, குழந்தைகளின் பிறப்பை சிறப்பிக்கும் வகையில் உருவாக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். மேலும், தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாகக் கூறப்பட்ட திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம், மக்களிடம் நம்பிக்கையை வலுப்படுத்துவதே நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த திட்டம், தமிழகத்தில் சமூக நலத்திட்டங்களின் வரிசையில் ஒரு புதிய முன்னெடுப்பாகக் கருதப்படுகிறது. தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டம், மாநில அரசின் மக்கள் நலக் கொள்கைகளில் முக்கியமான இடத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க கத்தாரில் தீ விபத்து.. திருநெல்வேலியை சேர்ந்த 3 இளைஞர்கள் உயிரிழப்பு!

 காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு சொந்தம்.. மேகதாதுவில் ஓர் செங்கலை கூட வைக்க அனுமதியோம்.. அமைச்சர் விஸ்வநாதன்! Minister Viswanathan on Mekedatu

 காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு சொந்தம்.. மேகதாதுவில் ஓர் செங்கலை கூட வைக்க அனுமதியோம்.. அமைச்சர் விஸ்வநாதன்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com