Canada : கனடாவில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக இந்திய இளைஞர்கள் இரண்டு பேர் அந்நதாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
Canada : கனடாவில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக இந்திய இளைஞர்கள் இரண்டு பேர் அந்நதாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Published on: June 23, 2026 at 3:42 pm
ஒட்டவா, ஜூன் 23, 2026: கனடாவில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட வழக்கில், இரண்டு இந்தியக் குடிமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். முன்னதாக அந்நாட்டின் சர்ரே காவல் துறை (எஸ்.பி.எஸ்) நடத்திய ‘புராஜெக்ட் ஃபேண்டம்’ என்ற நான்கு மாத விசாரணையின் போது, 8,91,000 கனடா டாலர் மதிப்புள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதில் உயிருக்கு ஆபத்தான ஃபென்டானிலும் அடங்கியது.
இந்த நடவடிக்கையில் மூன்று இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 24 வயதான குர்ஜோத் சிங் மீது கட்டுப்படுத்தப்பட்ட பொருளைக் கடத்தல் மற்றும் வைத்திருத்தல் தொடர்பான பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
மற்ற இரண்டு இந்தியர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை; அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், கனடா எல்லைச் சேவை முகமை (சி.பி.எஸ்.ஏ) அவர்களை வெளியேற்றியுள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக சர்ரே காவல் துறை தெரிவித்ததாவது, கைப்பற்றப்பட்ட 468 கிராம் ஃபென்டானில் சுமார் 23,400 உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய அளவுகளுக்கு சமமானது. CBSA, SPS மற்றும் அவசரக்கால மீட்புக் குழுவின் இணைந்த நடவடிக்கையால் இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்த ஆண்டு மே மாதம் சி.பி.எஸ்.ஏ தலைவர் எரின் ஓ’கோர்மன் கூறுகையில், குடியேற்றம் தொடர்பான 446 விசாரணைகள் தொடங்கப்பட்டதாகவும், 118 வெளியேற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாகவும், இந்தியர்கள் உட்பட 55 பேர் வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதுவரை வெளியேற்றப்பட்டவர்கள் பெரும்பாலும் மிரட்டிப் பணம் பறித்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளுடன் இருந்த நிலையில், இப்போது போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளும் அதேபோல் கடுமையாகச் செயல்படுத்தப்படுகின்றன.
இதையும் படிங்க : உலகின் நம்பகமான கூட்டாளியாக இந்தியா உருவெடுத்து வருகிறது: பாரிஸில் பிரதமர் மோடி பேச்சு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com