Narendra modi France Visit : பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா உலக நாடுகளின் நம்பகமான கூட்டாளியாக உருவெடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
Narendra modi France Visit : பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா உலக நாடுகளின் நம்பகமான கூட்டாளியாக உருவெடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

Published on: June 19, 2026 at 2:20 pm
பாரிஸ், ஜுன் 19 2026: பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இந்திய வம்சாவளியினரிடையே இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாடுகளுக்கிடையிலான உறவுகள் முன்பு வணிகத்தின் அடிப்படையில் மட்டுமே இருந்தன; ஆனால் இன்று வணிகத்துடன் நம்பிக்கையும் அதே அளவு முக்கியத்துவம் பெற்றுள்ளது என அவர் கூறினார். ஒவ்வொரு நாடும் நீண்டகால நம்பிக்கைக்குரிய கூட்டாளிகளைத் தேடுகிறது, இந்தியா அதற்கான சிறந்த உதாரணம் என அவர் குறிப்பிட்டார். நீண்டகால நம்பகத்தன்மை கொண்ட கூட்டாளிகளை உலக நாடுகள் தேடி வருவதாகவும், நிலையான கூட்டுறவு மற்றும் தடையற்ற விநியோகச் சங்கிலிக்கான தேவை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் வளர்ச்சி, புதுமை மற்றும் எதிர்கால சந்ததியினருக்கான வாய்ப்புகளை உருவாக்கும் பல்வேறு துறைகளில் அரசு தொடர்ந்து முதலீடு செய்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். இந்தியாவின் பயணம் தற்போது ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளதாகவும், மக்களின் எதிர்பார்ப்புகளும் புதிய உச்சத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.
எவியான் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில், நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட கூட்டாண்மையின் அவசியத்தை இந்தியா வலியுறுத்தியதாகவும், உலகளாவிய நிர்வாகம் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாக இருக்கும்போது மட்டுமே பயனுள்ளதாக அமையும் என்ற இந்தியாவின் கருத்தை தெளிவாக எடுத்துரைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
உலகம் தற்போது குழப்பம் மற்றும் அசாதாரண நிலையை எதிர்கொள்கிறது. இத்தகைய சூழலில் இந்தியா-பிரான்ஸ் உறவு நம்பிக்கை, நிலைத்தன்மை மற்றும் ஒத்துழைப்பின் வலுவான தூணாக உருவெடுத்துள்ளதாக கூறினார். இரு நாடுகளின் உறவும் “சிறப்பு உலகளாவிய மூலோபாய கூட்டாண்மை” என்ற உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் பிரான்ஸ் இணைந்து ‘டிரிஷ்னா’ (TRISHNA) செயற்கைக்கோளை ஏவ உள்ளதாக அறிவித்தார். இந்த செயற்கைக்கோள் உலகளாவிய நீர் மற்றும் உணவுப் பாதுகாப்புக்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
தனது அரசு 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் பிரான்ஸ் பயணத்தை மேற்கொண்டுள்ளதாக கூறிய பிரதமர் மோடி, கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா பல்வேறு துறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டுள்ளதாக தெரிவித்தார். பொருளாதார முன்னேற்றத்தைத் தாண்டி, மக்களை அதிகாரமளித்தல் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தின் முக்கிய நோக்கமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக, பாரிஸில் பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். “Bonjour Modi” (வணக்கம் மோடி) என்ற பதாகைகளுடன் திரண்டிருந்த அவர்கள், “மோடி, மோடி” மற்றும் “பாரத் மாதா கி ஜெய்” என்ற முழக்கங்களை எழுப்பி அவரை வரவேற்றனர். பிரான்சில் வாழும் இந்திய சமூகத்தினர் பெருமளவில் திரண்டு பிரதமருக்கு ஆதரவை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க ராகுல் காந்தியின் அணுகுமுறை பா.ஜ.க.வை வலுப்படுத்துகிறது.. பினராய் விஜயன்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com