அட்லி பற்றி அல்ல, சட்னி குறித்தும் பேசுவேன்.. தி.மு.க மாஜி அமைச்சர் காட்டம்

SS Sivasankar: சினிமா இயக்குனர் அட்லி மற்றுமல்ல சட்னி குறித்தும் பேசுவேன் என திமுக முன்னாள் அமைச்சர் சிவ சங்கர் தெரிவித்துள்ளார்.

Published on: June 19, 2026 at 6:31 pm

சென்னை, ஜூன் 19, 2026: சினிமா இயக்குனர் அட்லி மற்றும் சட்னி குறித்தும் பேசுவேன் என திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது, அவர் சினிமா இயக்குனர் அட்லி பல படங்களில் இருந்து வெட்டி ஒட்டி படம் எடுப்பார்; அதுபோல திமுக அரசின் சாதனைகளை வெட்டி ஒட்டி ஆளுநர் உரை தயாரிக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.

சிவசங்கரின் இந்தக் கருத்துக்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், “சட்டமன்றத்துக்கும் சினிமாவுக்கும் என்ன சம்பந்தம்?” எனக் கேள்வி எழுப்பினார். இதனால் சட்டமன்றத்தில் சற்று பரபரப்பு நிலவியது. அதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் சிவசங்கர், “சினிமா இயக்குனர் அட்லி மட்டுமல்ல, சட்னி குறித்தும் பேசுவேன்” என்று சிரிப்பூட்டும் வகையில் பதிலளித்தார்.

அவரது இந்தக் கூற்று சட்டமன்றத்தில் இருந்த உறுப்பினர்களிடையே சிரிப்பை ஏற்படுத்தியது. இந்த விவாதம் அரசின் சாதனைகள், ஆளுநர் உரை, மற்றும் சினிமா ஒப்பீடு ஆகியவற்றைச் சுற்றி நடந்தது. முன்னாள் அமைச்சர் சிவசங்கரின் நகைச்சுவை கலந்த பதில், சட்டமன்றத்தில் சூழ்நிலையை சற்றே இலகுவாக்கியது.

இதையும் படிங்க மேகதாது அணைக்கு எதிராக தனித் தீர்மானம்; சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றம்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com