UPSC Students Scholarship: UPSC முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அறிவிக்கப்பட்டுள்ளது.
UPSC Students Scholarship: UPSC முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அறிவிக்கப்பட்டுள்ளது.

Published on: June 19, 2026 at 7:15 pm
சென்னை, ஜூன் 19, 2026: தமிழ்நாடு அரசு UPSC முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இன்று முதல் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், UPSC குடிமைப்பணி மற்றும் இந்திய வனப்பணி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு ரூ.25,000 வழங்கப்படும். இந்த தொகை நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், http://portal.naanmudhalvan.tn.gov.in/upsc_registration/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம், மாணவர்கள் தங்களது தேர்ச்சி விவரங்களை பதிவுசெய்து, ஊக்கத்தொகையை பெறலாம். இந்த அறிவிப்பு UPSC தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு ஊக்கமும் ஆதரவுமாக அமைகிறது. மாநில அரசு வழங்கும் இந்த நிதி உதவி, மாணவர்கள் UPSC முதன்மைத் தேர்வுக்கான தயாரிப்பில் மேலும் உற்சாகத்துடன் ஈடுபட உதவும்.
இதையும் படிங்க பள்ளிகள் அருகே டாஸ்மாக், உறுதியாக அகற்றப்படும்.. அமைச்சர் ராஜ் மோகன்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com