Vijayadharani joins TVK : “இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்தியாவை வழிநடத்தக்கூடிய முக்கிய இடத்தில் தலைவர் விஜய் இருப்பார்” என தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த விஜயதரணி கூறியுள்ளார்.
Vijayadharani joins TVK : “இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்தியாவை வழிநடத்தக்கூடிய முக்கிய இடத்தில் தலைவர் விஜய் இருப்பார்” என தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த விஜயதரணி கூறியுள்ளார்.

Published on: June 13, 2026 at 8:38 pm
Updated on: June 13, 2026 at 10:43 pm
சென்னை, ஜூன் 13, 2026: சென்னையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.விஜயதரணி, “தமிழக வெற்றிக் கழகத்தில் என்னை அன்போடு அரவணைத்துச் சேர்த்துக் கொண்டனர். தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும், நேர்மையான ஆட்சியைத் தர வேண்டும் என்ற உன்னத நோக்கில் இக்கட்சி செயல்படுகிறது.
போதை கலாச்சாரத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற சபதத்தை ஏற்று, பெண்களின் பாதுகாப்பை உயர்த்திப் பிடிக்கும் ஒரு சிறந்த தலைவராக விஜய் விளங்குகிறார். தமிழ்நாட்டை வழிநடத்தக்கூடிய தகுதி தவெகவிற்கு முழுமையாக உள்ளது. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்தியாவை வழிநடத்தக்கூடிய முக்கிய இடத்தில் தலைவர் விஜய் இருப்பார் என்பதை நான் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த இரண்டரை ஆண்டு காலம் பாஜகவில் எனக்கு எந்தப் பணியும் இல்லாமல் இருந்தது. அரசியலில் உழைப்பும், மக்கள் பணியும் மிக முக்கியம். என்னைப் போன்ற உழைக்கக் கூடியவர்களுக்கு தவெக ஒரு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது. எங்கள் உழைப்பு மக்களுக்குத் தேவை என்பதை அறிந்து எங்களை அழைத்திருக்கிறார்கள். நிச்சயமாக தவெக ஆட்சி, இந்திய நாடே திரும்பிப் பார்க்கக்கூடிய ஒரு சிறந்த ஆட்சியாக அமையும்” எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்த விஜயதரணி, கடந்த 2024- ஆம் ஆண்டு தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டிருந்தார். பின்னர் அக்கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில் தற்போது தவெகவில் இணைந்துள்ளார்.
இதையும் படிங்க ஒரு பாடலுக்கு 36 டியூன் போட்ட இளையராஜா.. ப்ளாஷ்பேக்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com