சென்னை, ஜூன் 13, 2026: சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழா நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் எம்.பி.க்கள் பாலகங்கா, இளவரசன், முன்னாள் அமைச்சர் பச்சைமால், திருநெல்வேலி முன்னாள் மேயர் விஜயலட்சுமி, அதிமுக சிறுபான்மைப் பிரிவு நிர்வாகி ஜான் மகேந்திரன், ஆண்டிப்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ. தவசி, பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி உள்ளிட்டோர் தவெகவில் இணைந்தனர்.

அவர்களை அமைச்சர் என். ஆனந்த் கட்சித் துண்டு அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, விஜய் தமிழன் பார்த்திபன், ராஜ்மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய அமைச்சர் ஆனந்த், தவெகவில் இணையும் அனைவருக்கும் மரியாதை வழங்கப்படும் என்றும், அவர்களுக்கு உரிய பதவிகளை முதலமைச்சர் விஜய் தீர்மானிப்பார் என்றும் தெரிவித்தார்.

அமைச்சர்கள் அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள் தவறு செய்தால் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்படும் எனவும், தொகுதியில் மக்கள் பிரச்சனைகள் கூறப்பட்டால் உடனடியாக தீர்வு காணப்படும் எனவும் அவர் வலியுறுத்தினார். வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறும் என சபதம் எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும், இன்னும் 20 ஆண்டுகளுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராக இருப்பார் என்றும், ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், பாகுபாடு பார்ப்பதில்லை என்றும் அமைச்சர் ஆனந்த் தெரிவித்தார். மக்கள் பிரச்சனைகளுக்கு எப்போதும் தீர்வு காண தயாராக இருப்போம் எனவும் அவர் உறுதியளித்தார்.

இதையும் படிங்க : ஆபாச வீடியோ விவகாரம்.. சேலத்தில் த.வெ.க நிர்வாகி கைது

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்