ஆபாச வீடியோ விவகாரம்.. சேலத்தில் த.வெ.க நிர்வாகி கைது

Salem obscene video blackmail: ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் சேலத்தில் த.வெ.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

Published on: June 13, 2026 at 6:57 pm

சேலம், ஜூன் 13, 2026: சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன், பெண்களுக்கு உதவி செய்வது போல் நடித்து ஆபாச வீடியோக்களை எடுத்து மிரட்டியதாக போலீசார் கைது செய்துள்ளனர். மளிகைக் கடை நடத்தி வந்த இவர்மீது, பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஆடியோ வெளியிட்டு புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

அந்த ஆடியோவில், குடும்பச் செலவுக்காக கடன் வாங்கிய நிலையில், மணிகண்டன் உதவி செய்ததாகவும், பின்னர் அவருடனான பழக்கத்தில் அவர் பல பெண்களின் ஆபாச வீடியோக்களை வைத்திருப்பதை கண்டறிந்ததாகவும், அதன்பின் தன்னை மிரட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த பெண் வலியுறுத்தினார்.

இந்த ஆடியோ சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அணில் குமார் கிரியின் கவனத்திற்கு சென்றது. தொடர்ந்து கொண்டலாம்பட்டி போலீசார் மணிகண்டனை விசாரித்தனர். அவரது செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்தபோது, பல பெண்களின் ஆபாச வீடியோக்களை எடுத்து மிரட்டியதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. இதன் பேரில், பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், மணிகண்டன் கைது செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட மணிகண்டன் தவெக நிர்வாகி என்று கூறப்பட்ட நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தெற்கு மாவட்ட செயலாளர் ஆர். எஸ். மணிகண்டன், அவருக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவல்களை வெளியிடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : ‘தமிழ்நாட்டின் ஒரு பகுதி மேகதாது’.. வியனரசு அதிரடி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com