Dindigul calf with two heads : திண்டுக்கல்லில் இரட்டை தலைகளுடன் பிறந்த கன்றுக்குட்டியை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
Dindigul calf with two heads : திண்டுக்கல்லில் இரட்டை தலைகளுடன் பிறந்த கன்றுக்குட்டியை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

Published on: June 13, 2026 at 7:08 pm
திண்டுக்கல், ஜூன் 13, 2026: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே இரண்டு தலைகள் ஒட்டிய நிலையில் பிறந்த அதிசய கன்றுக்குட்டி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வடமதுரை அருகே உள்ள மோளப்பாடியூரைச் சேர்ந்த விவசாயி வேல்முருகன் வளர்த்த பசு ஒன்று நீண்ட நேரம் பிரசவிக்க முடியாமல் தவித்த நிலையில், கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தபோது இந்த அதிசய கன்று பிறந்தது.
தகவல் கிடைத்ததும் கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் முனியாண்டி, மருத்துவர் பாலமுருகன் உள்ளிட்ட மருத்துவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரசவம் பார்த்தனர். அப்போது இரண்டு தலைகள் ஒட்டிய நிலையில் ஆண் கன்று பிறந்தது. இந்த செய்தி அருகிலுள்ள கிராமங்களில் காட்டுத்தீ போல் பரவியதால், பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கன்றுக்குட்டியை பார்த்துச் சென்றனர்.
இரண்டு தலைகளுடன் பிறந்த கன்றுக்குட்டி தன்னிச்சையாக பால் குடிக்க முடியாததால், வேல்முருகன் குடும்பத்தினர் பாலை கலந்து பாட்டிலில் கொடுத்து வருகின்றனர். மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதால், கன்றுக்குட்டி உயிருடன் வாழும் வாய்ப்பு குறித்து ஆர்வம் நிலவுகிறது.
இந்த அதிசய கன்று பிறந்த சம்பவம் கிராமப்புற மக்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இயற்கையின் வியப்பூட்டும் நிகழ்வாகக் கருதப்படும் இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களிலும் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க : ஆபாச வீடியோ விவகாரம்.. சேலத்தில் த.வெ.க நிர்வாகி கைது
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com