சேலத்தில் பரபரப்பு.. டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் பாம் வீச்சு!

Salem TASMAC attack : சேலம் கோரிமேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் சனிக்கிழமை நள்ளிரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Published on: June 8, 2026 at 12:13 pm

Updated on: June 8, 2026 at 1:35 pm

சேலம், ஜுன் 8 2026: சேலம் கோரிமேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடை மீது சனிக்கிழமை நள்ளிரவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து தெரிவித்த போலீசார், இரவு 12 மணிக்குப் பிறகு இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் வந்து, பெட்ரோல் நிரப்பிய பாட்டிலுக்கு தீ வைத்து கடைக்குள் எறிந்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி சிசிடிவி

பாட்டில் வெடித்து, கடைக்கு வெளியே குவிக்கப்பட்டிருந்த காலியான கார்ட்போர்டு பெட்டிகளில் தீப்பற்றியது. உடனடியாக தகவல் கிடைத்ததும் சூரமங்கலம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் கடைக்குள் இருந்த மதுபான பொருட்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்தனர். மேலும், இந்த தாக்குதல் சம்பவம் அதே இரவில் ஏற்பட்ட ஏதேனும் தகராறுடன் தொடர்புடையதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : 3 நாள் டைம், பகிரங்க மன்னிப்பு.. த.வெ.க பெண் எம்.எல்.ஏ.வுக்கு தி.மு.க. நோட்டீஸ்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com