நாகர்கோவில் விசாரணை கைதி மரணம்.. 3 காவலர்கள் சிக்கியது எப்படி?

Nagercoil Remand Prisoner Death Case : நாகர்கோவில் விசாரணை கைதி சபரி வர்மன் மரண விவகாரத்தில் 3 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Published on: July 15, 2026 at 5:07 pm

கன்னியாகுமரி, ஜூலை 15, 2026: கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் (34), தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வைத்திருந்ததாகக் கூறி ஜூலை 9ஆம் தேதி கைது செய்யப்பட்டு நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், ஜூலை 13 அன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் மொத்தம் 19 இடங்களில் கொடூரமான காயங்கள் இருப்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அறிக்கையில், வலது கையில் 6 இடங்கள், இடது நெஞ்சின் கீழ் பகுதியில் 7 செ.மீ அளவிலான காயம், தலையில் 2 இடங்கள் மற்றும் பின்னங்கழுத்து, பின்னந்தலையில் பலத்த காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல், சிறைக்குள் சபரிவர்மன் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார் என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.

சிறையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஜூலை 12ஆம் தேதி சபரிவர்மன் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, நாகர்கோவில் சிறை தலைமை வார்டன் ஜெகன், வார்டன்கள் சிவகுமார் மற்றும் திருவிடைநம்பி ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம், சிறை நிர்வாகத்தின் பாதுகாப்பு மற்றும் மனித உரிமை மீறல்களைப் பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது. மாற்றுத்திறனாளி கைதி மீது நிகழ்ந்த இந்தக் கொடூரமான தாக்குதல், மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும், குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : லஞ்சம் கேட்டால் வாட்ஸ்அப்பில் புகாரளிக்கலாம்.. தமிழ்நாடு அரசு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com