Schools Ordered to Reveal Fees : தனியார் பள்ளிகள் கட்டண விவரங்கள் வெளியிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, பெற்றோர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
Schools Ordered to Reveal Fees : தனியார் பள்ளிகள் கட்டண விவரங்கள் வெளியிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, பெற்றோர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Published on: May 30, 2026 at 10:41 pm
சென்னை, மே 30, 2026: தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டண விவரங்களை பொதுமக்களின் பார்வைக்கு வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பள்ளிகள் ஜூன் 4ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் இந்த உத்தரவு பெற்றோர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
கோவை சேர்ந்த லியாகத் அலி, 2022 அக்டோபரில் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டண விவரங்களைத் தொடர்பாக தகவல் கேட்டு மனு தாக்கல் செய்தார். ஆனால் அதிகாரிகள் தகவல் வழங்காமல், மனுவை துறைகளுக்குள் மாற்றி அனுப்பியதால், அவர் மேல்முறையீடு செய்தார். அந்த மனு மாநில தகவல் ஆணையர் இளம்பரிதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையில், மனுதாரருக்கு முழுமையான தகவல்களை இரு வாரங்களில் கட்டணமின்றி விரைவு தபால் மூலம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மேலும், பெற்றோர்கள் செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என ஆணையம் வலியுறுத்தியது.
மெட்ரிக், சி.பி.எஸ்.இ மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தங்களின் வகுப்புவாரியான கட்டண விவரங்களை பள்ளி நுழைவாயிலில் உள்ள விளம்பர பலகைகளிலும், அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், மாணவர் சேர்க்கை விண்ணப்பப் படிவங்களிலும் வெளியிட வேண்டும்.
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் ஆய்வு செய்து உறுதிப்படுத்திய அறிக்கையை ஜூன் 15ஆம் தேதி ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், ஜூன் 16ஆம் தேதி தனியார் பள்ளிகளின் இயக்குநர் நேரில் வந்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு எப்போது?.. முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com