இரண்டு ஆண்டுகளில் பணநாயகத்தை வீழ்த்தியவர் விஜய்.. செங்கோட்டையன்

Sengottaiyan on Vijay’s Win : தமிழக வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன், “தவறுகள் நடந்தால் நடவடிக்கை உறுதி” எனத் தெரிவித்துள்ளார். மேலும், இரண்டு ஆண்டுகளில் பணநாயகத்தை வீழ்த்தியவர் விஜய் எனவும் தெரிவித்துள்ளார்.

Published on: May 30, 2026 at 10:31 pm

கோயம்புத்தூர், மே 30, 2026: சென்னையிலிருந்து கோவைக்கு வந்த வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, “தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் தூய்மையான நிர்வாகம் நடைபெற வேண்டும் என்பதே முதலமைச்சரின் நோக்கம். அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன” என தெரிவித்தார்.

சமீபத்தில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்திருப்பது குறித்து கேட்டதற்கு, “தவறுகள் எங்கு நடந்தாலும், சுட்டிக்காட்டப்படும் பொழுது எந்த தயக்கமும் இன்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஊழல் இனி நடக்கக் கூடாது என்பதே எங்கள் நோக்கம். தகவல்கள் உண்மையாக இருந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் உறுதியளித்தார்.

சொத்துவரி, குப்பை வரி தொடர்பான கேள்விக்கு, “அதுகுறித்து உள்ளாட்சித் துறை அமைச்சரிடம் கேளுங்கள்” என அவர் பதிலளித்தார்.

தொடர்ந்து, “முதலமைச்சர் விஜய் வெறும் இரண்டு ஆண்டுகளில் பணநாயகத்தை முறியடித்து ஜனநாயகத்தை உருவாக்கியுள்ளார். இதுவே தவெக வளர்ச்சி. மக்கள் ஏற்கனவே அவரை என்றைக்கும் முதலமைச்சராக வாக்களித்து விட்டனர்” என அவர் கூறினார்.

வருவாய் துறையின் வரவீனம், செலவினம் தொடர்பான கேள்விக்கு, “ஒரு மாத கால அவகாசம் தரப்பட வேண்டும். அப்போதுதான் சரியான புள்ளிவிவரங்களை வழங்க முடியும்” என விளக்கினார்.

மேலும், பட்டா தொடர்பான விஷயங்களில் ஏழை மக்களுக்கு ஏதேனும் தவறு நடந்தால் நேரடியாக தெரிவிக்கலாம், அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், துறையின் கீழ் பணிபுரியும் அனைவருக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, தவெக ஆட்சி பொறுப்பேற்ற சில நாட்களிலேயே சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலளிக்காமல் அவர் அங்கிருந்து சென்றார்.

இதையும் படிங்க : மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மெட்ரோ பயணம்.. எரிபொருள் சேமிப்பு விழிப்புணர்வு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com