L. Murugan Takes Metro Ride: மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மெட்ரோவில் பயணம் செய்து எரிபொருள் சேமிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
L. Murugan Takes Metro Ride: மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மெட்ரோவில் பயணம் செய்து எரிபொருள் சேமிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

Published on: May 30, 2026 at 10:23 pm
சென்னை, மே 30, 2026: மத்திய இணை அமைச்சர் எல். முருகன், டெல்லியில் இருந்து சென்னை வந்தபின் வழக்கம்போல் கார் மூலம் செல்லாமல், விமான நிலையம் மெட்ரோ நிலையத்தில் இருந்து அரும்பாக்கம் நோக்கி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். இதன் மூலம் எரிபொருள் சேமிப்பை வலியுறுத்தும் விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தினார்.
இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் எரிபொருள் செலவு அதிகரித்து வரும் நிலையில், தேவையற்ற வாகன பயன்பாட்டை குறைத்து பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பாதுகாப்பு அதிகாரிகளின் கூடுதல் வாகனங்களும் பயன்படுத்தப்படவில்லை.
ரயிலில் பயணித்த பொதுமக்கள், மத்திய இணை அமைச்சரை ஆச்சரியத்துடன் பார்த்ததோடு, அவருடன் உரையாடியும் சென்றனர். பொதுப் போக்குவரத்தை பயன்படுத்திய இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
செய்தியாளர்களிடம் பேசிய எல். முருகன், “பிரதமர் நரேந்திர மோடி எரிபொருள் சேமிக்க பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நான் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துகிறேன். மின்சார வாகனங்களையும் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறேன்” எனக் குறிப்பிட்டார்.
மேலும், “சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மெட்ரோ ரயில் சிறந்தது. அனைவரும் பிரதமர் சொல்வது போல் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தினால் நாட்டிற்கு நன்மை ஏற்படும்” என அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க : பெருமகளூர் டாஸ்மாக் அனுமதி ரத்து.. உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com