Madurai High Court : பேராவூரணி அருகே பெருமகளூரில் டாஸ்மாக் கடை அனுமதியை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Madurai High Court : பேராவூரணி அருகே பெருமகளூரில் டாஸ்மாக் கடை அனுமதியை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Published on: May 30, 2026 at 10:14 pm
மதுரை, மே 30, 2026: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பெருமகளூரில் டாஸ்மாக் கடை அமைக்க மாவட்ட கலெக்டர் வழங்கிய அனுமதியை, உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது. ரவிச்சந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “நேதாஜி நகரில் டாஸ்மாக் கடைக்கு அனுமதி வழங்கக் கூடாது” எனக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி. பரதசக்கரவர்த்தி, கலெக்டர் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மனுவின் அடிப்படையில், டிஆர்ஓவின் வாய்மொழி கருத்தை மட்டுமே கொண்டு அனுமதி வழங்கியிருப்பது சட்டவிரோதம் எனக் குறிப்பிட்டார். எழுத்துப்பூர்வமான விசாரணை இல்லாமல் முடிவு எடுக்கப்பட்டதால், கலெக்டரின் உத்தரவு செல்லாது என தீர்மானிக்கப்பட்டது.
மேலும், மாதர் சங்கம் முன்வைத்த காரணங்கள் தவறானவை என்றும், விபத்துகள் மது அருந்தியவர்களுடன் தொடர்புடையவை அல்ல என்றும் அரசு தரப்பில் விளக்கப்பட்டது. இதனால், அவசரகதியில் விதிமுறைகளை பின்பற்றாமல் மது விற்பனையை முன்னிறுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
“மது விற்கலாம்; ஆனால் சுயமரியாதை, மனசாட்சியை விற்க முடியாது” என நீதிபதி அதிருப்தி தெரிவித்ததோடு, டாஸ்மாக் கடை துவக்க கலெக்டர் வழங்கிய அனுமதியை ரத்து செய்து, அக்கடையை உடனடியாக மூட உத்தரவிட்டார்.
தொடர்ந்து, மனுதாரர் மற்றும் ஆட்சேபனை தெரிவித்தவர்கள் கலெக்டர் நிர்ணயிக்கும் தேதியில் ஆஜராக வேண்டும் என்றும், அவர்களின் கருத்துகளை சட்டப்படி பரிசீலித்து இறுதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க : திருச்சி செல்கிறார் விஜய்.. எப்போது தெரியுமா? தொண்டர்கள் உற்சாகம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com