Doctors turned stars in South cinema : டாக்டர் படித்து சினிமா துறையை தேர்வு செய்துள்ள நடிகைகள் குறித்து பார்க்கலாம்.
Doctors turned stars in South cinema : டாக்டர் படித்து சினிமா துறையை தேர்வு செய்துள்ள நடிகைகள் குறித்து பார்க்கலாம்.

Published on: May 30, 2026 at 5:02 pm
சென்னை, மே 30, 2026: நடிகைகள் சாய் பல்லவி, ஸ்ரீலீலா, ஆதிதி சங்கர், மீனாட்சி சௌதரி, ஐஸ்வர்யா லக்ஷ்மி போன்ற தென்னிந்திய நடிகைகள் மருத்துவப் படிப்பை முடித்தும், சினிமாவைத் தங்கள் வாழ்க்கைப் பாதையாகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இவர்களில் அதிதி சங்கர், பிரபல இயக்குநர் எஸ். சங்கரின் மகள் ஆவார். இவர் ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ் முடித்தவர் ஆவார். இவரைப் போல் ஸ்ரீலாலாவும் டாக்டர் ஆவார். இவர் டாக்டர் தொழிலைப் போல சினிமாவையும் ரசிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
சாய் பல்லவி, ஜார்ஜியா நாட்டில் மருத்துவம் படித்தவர் ஆவார். இவர் பிரேமம் படத்தில் ஆசிரியையாக நடித்தும் பெரும் புகழை சம்பாதித்தார். மருத்துவம் முடித்தும், சினிமாவைத் தனது தொழிலாக தேர்ந்தெடுத்தார். தொடர்ந்து மீனாட்சி சௌத்ரி பல் மருத்துவர் ஆவார். இவர், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். ஐஸ்வர்யா லக்ஷ்மியை பொறுத்தமட்டில் இவர் எர்ணாகுளத்தில் மருத்துவம் படித்துள்ளார்.
இந்த நடிகைகள் மருத்துவம் படித்துள்ள நிலையில் சினிமா துறையில் வெற்றிகரமாக இயங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஜார்ஜ் குட்டி இனி கேபிள் ஆபரேட்டர் அல்ல.. பாக்ஸ் ஆபிஸில் தூள் கிளப்பும் திரிஷ்யம்-3
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com