இந்தியா வந்த ட்ரம்ப் மகள்.. தாஜ்மஹால், அக்ஷர்தாம்-ஐ கண்டுகளிப்பு!

Tiffany Trump at Taj Mahal : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மகள் இந்தியா வந்துள்ள நிலையில், அவர் தாஜ்மஹால் மற்றும் அக்ஷர்தாமை கண்டுகளித்தார்.

Published on: May 30, 2026 at 4:27 pm

புதுடெல்லி, மே 30, 2026: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் டிஃபனி டிரம்ப் தற்போது இந்தியாவில் தனிப்பட்ட பயணமாக வந்துள்ளார். அவர் தனது கணவர் மைக்கேல் புலோஸ் மற்றும் நண்பர்களுடன் தாஜ்மஹால் (ஆக்ரா) மற்றும் அக்ஷர்தாம் கோவிலுக்கு (டெல்லி) சென்றுள்ளார்.

டெல்லி அக்ஷர்தாம் கோவில்

முன்னதாக, டிஃபனி தனது கணவர் மைக்கேல் புலோஸ் மற்றும் நண்பர்களுடன் சென்றார். இந்நிலையில், அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் சமூக ஊடகத்தில் அவர்களை வரவேற்று புகைப்படம் பகிர்ந்தார்.

தாஜ்மஹால் வருகை

இதையடுத்து, கோவிலுக்கு சென்ற மறுநாள் காலை, தம்பதியினர் தாஜ்மகாலை பார்வையிட்டனர். இந்த நிலையில், பி.டி.ஐ அவர் தொடர்ந்து, ராஜஸ்தானின் ஜெய்சல்மர் செல்ல திட்டமிட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.

டிஃபனி டிரம்ப் யார்?

டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது முன்னாள் மனைவி மார்லா மேபிள்ஸ் ஆகியோரின் மகள் டிஃபனி ஆவார். இவர், 2022 நவம்பர் 12-ஆம் தேதி அமெரிக்க-லெபனானிய வணிகர் மைக்கேல் புலோஸை திருமணம் செய்தார்.

இந்நிலையில், டிஃபனி தனது பயணத்தில் இந்திய பாரம்பரியத்தை ஆராய்ந்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்நிலையில், அமெரிக்க தூதரகம் மற்றும் கோவில் நிர்வாகம் அவர்களின் வருகையை சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : கென்யா: பள்ளி மாணவிகள் விடுதியில் தீ விபத்து..16 பேர் பலி

பின்வாங்கும் அமெரிக்க படைகள்? உண்மைக்கு புறம்பான தகவல்.. ஈரானுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை!
US Denies Hormuz Report

பின்வாங்கும் அமெரிக்க படைகள்? உண்மைக்கு புறம்பான தகவல்.. ஈரானுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com