U-18 Hockey kicks off in Japan : ஜப்பானில் இளையோர் ஹாக்கிப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் முழு வீச்சில் இந்திய அணி தயாராகி வருகிறது.
U-18 Hockey kicks off in Japan : ஜப்பானில் இளையோர் ஹாக்கிப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் முழு வீச்சில் இந்திய அணி தயாராகி வருகிறது.

Published on: May 30, 2026 at 12:02 pm
டோக்கியோ, மே 30, 2026: இந்திய அணி ஜப்பானில் நடைபெறும் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்கத் தயாராகியுள்ளது. ஜூன் 6 வரை காகமிகஹாரா நகரில் நடைபெறும் இந்த போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் தங்கள் பிரிவில் முதல் ஆட்டங்களை தொடங்குகின்றன.
இதில் ஏ பிரிவில் உள்ள இந்திய அணி மே 29ஆம் தேதி கஜகஸ்தான் அணியையும், மே 31ஆம் தேதி ஜப்பான் அணியையும், ஜூன் 1ஆம் தேதி கொரியா அணியையும், ஜூன் 3ஆம் தேதி சீன தைவான் அணியையும் எதிர்கொள்கிறது.
“பி” பிரிவில் மலேசியா, பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் சீனா உள்ளிட்ட அணிகள் உள்ளன.
மகளிர் அணி
மகளிர் அணியை பொறுத்தமட்டில் பி பிரிவில் இந்தியா உள்ளது. அந்த வகையில், மே 30ஆம் தேதி மலேசியாவையும், மே 31ஆம் தேதி கொரியாவையும், ஜூன் 2ஆம் தேதி சிங்கப்பூரையும் எதிர்கொள்கிறது.
பி பிரிவில் ஜப்பான், தைவான், வங்காளதேசம் மற்றும் சீனா உள்ளிட்ட அணிகள் உள்ளன. இதில், ஒவ்வொரு பிரிவிலிருந்தும் முதல் இரண்டு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இறுதிப் போட்டி
போட்டியை பொறுத்தமட்டில் அரையிறுதி ஆட்டம் ஜூன் 5ஆம் தேதியும், இறுதிப் போட்டி ஜூன் 6ஆம் தேதியும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நார்வே செஸ்.. கார்ல்சன்-ஐ வீழ்த்திய பிரக்யானந்தா!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com