Raja Randhir Singh : ஐந்து முறை ஒலிம்பிக்கில் பங்கேற்ற துப்பாக்கிச் சுடும் வீரர் ராஜா ரந்தீர் சிங் காலமானார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Raja Randhir Singh : ஐந்து முறை ஒலிம்பிக்கில் பங்கேற்ற துப்பாக்கிச் சுடும் வீரர் ராஜா ரந்தீர் சிங் காலமானார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Published on: May 28, 2026 at 2:47 pm
புதுடெல்லி, மே 28, 2026: இந்திய நாட்டின் புகழ்பெற்ற துப்பாக்கி சுடும் வீரரும், ஐந்து முறை ஒலிம்பிக் போட்டியாளருமான இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முன்னாள் கௌரவச் செயலாளர் ராஜா ரந்தீர் சிங் புதன்கிழமை (மே 27, 2026) 79 வயதில் நீண்டநாள் உடல் நலக்குறைவால் தனது இல்லத்தில் காலமானார்.
ராஜா ரந்தீர் சிங், ஆசிய விளையாட்டு தங்கப் பதக்கம் வென்றவர் ஆவார். மேலும், அவர் அர்ஜுனா விருது பெற்றவர் ஆவார். ராஜா ரந்தீர் சிங்-ஐ பொறுத்தமட்டில், இந்தியாவின் மிகச் சிறந்த துப்பாக்கி சுடுபவர்களில் ஒருவராக விளங்கினார். மேலும், அவர் பட்டியாலா அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
முன்னாள் பஞ்சாப் முதலமைச்சரும், தற்போதைய பா.ஜ.க மூத்தத் தலைவருமான கேப்டன் அமரிந்தர் சிங்கின் உறவினரும் ஆவார். இது மட்டுமின்றி அவரது மாமா மகாராஜா யாதவீந்திர சிங் இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியுள்ளார். இது மட்டுமின்றி, அவரது தந்தை ராஜா பலீந்திர சிங், 1947 முதல் 1992 வரை இந்திய ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினராக இருந்தார்.
ராஜா ரந்தீர் சிங்கை பொறுத்தமட்டில் அவர் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் கௌரவச் செயலாளர், ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் செயலாளர், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர் என பல பொறுப்புகளை வகித்துள்ளார். இந்நிலையில், சிங்கின் தேசிய ரைஃபிள் சங்கம் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
அந்த இரங்கல் செய்தியில், “இந்தியாவின் மிக மதிப்புமிக்க விளையாட்டு நிர்வாகி” என அவரை புகழ்ந்துள்ளது.
இதையும் படிங்க : சூர்யவன்ஷியின் பேட் ஸ்விங் அபாரம்.. மனதார பாராட்டிய சச்சின் தெண்டுல்கர்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com