சூர்யவன்ஷியின் பேட் ஸ்விங் அபாரம்.. மனதார பாராட்டிய சச்சின் தெண்டுல்கர்!

Tendulkar praises young star : இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷின் பேட் ஸ்விங் அபாரம் என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார்.

Published on: May 28, 2026 at 1:11 pm

மும்பை, மே 28, 2026 : இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், வைவவ் சூர்யவன்ஷியின் 97 ரன்கள் இன்னிங்ஸை வெகுவாக பாராட்டியுள்ளார். அதில், “அவரின் பேட் ஸ்விங் அசாதாரணம்” என்று சச்சின் தெண்டுல்கர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், சனத் ஜயசூர்யா உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் 15 வயது இளம் வீரரின் திறமையை வியந்து புகழ்ந்துள்ளனர்.

வைவவ் சூர்யவன்ஷியின் சாதனை

15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 28 பந்துகளில் 97 ரன்கள் எடுத்தார். இதில், 12 சிக்ஸர்கள் அடங்கும். இதற்கிடையில், கிறிஸ் கேய்லின் ஐ.பி.எல் சீசன் சிக்ஸர் சாதனையை (59) முறியடித்து, சூர்யவன்ஷி 65 சிக்ஸர்களை பதிவு செய்தார். மேலும், சூர்யவன்ஷி கடந்த மாதத்தில் மூன்றாவது சதத்தை தவறவிட்டார்; இரண்டாவது முறையாக 97 ரன்களில் அவுட் ஆகியுள்ளார்.

சச்சின் தெண்டுல்கர் பாராட்டு

இந்த நிலையில் சூர்யவன்ஷியை சச்சின் தெண்டுல்கர் வெகுவாக பாராட்டியுள்ளார். அதில், “அவரது பேட் ஸ்விங் அசாதாரணம். முன் கால்களை அழகாக கிளியர் செய்வது அவரது ஆட்டத்தை இன்னும் சுதந்திரமாக்குகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.மேலும், அந்த இன்னிங்ஸ் அற்புதமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் யுவராஜ் சிங், “பாஸ் பேபி, உலக ரெக்கார்டை தகர்த்து விட்டது என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஹர்பஜன் சிங், “வைபவ் சூர்யவன்ஷியை சிக்ஸ் அடிக்கும் இயந்திரம் என புகழ்ந்துள்ளார்.
இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஜனத் ஜெயசூர்யா, “இளம் வயதில் இத்தகைய நம்பிக்கை, அசாதாரண திறமை. கிரிக்கெட்டுக்கு ஒரு சிறப்பு வீரர் வந்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : பாதியில் வெளியேறிய பஞ்சாப்.. மவுனம் கலைத்தார் பிரித்தி ஜிந்தா!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com