ஊர்வசி vs ஜெயராம்.. கொலை செய்தது யார்? பரபரக்கும், ‘பரிமளா அண்ட் கோ’!

Parimala and Co : நடிகர் ஜெயராம், நடிகை ஊர்வசி நடிப்பில் தயாராகியுள்ள பரிமளா அண்ட் கோ ஜூனில் வெளியாகிறது.

Published on: May 28, 2026 at 10:26 am

சென்னை, மே 28, 2026: ஜெயராம் – ஊர்வசி நடிப்பில் ‘பரிமளா அண்ட் கோ’ ஜூன் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்த நகைச்சுவைத் திரைப்படம், குடும்பம் சார்ந்த கொலை சந்தேகத்தை மையமாகக் கொண்ட கதை அமைப்பில் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில், ஜெயராம், ஊர்வசி, யோகி பாபு, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அனந்திகா சானில்குமார், சாண்டி, மிஷ்கின், பூர்ணிமா ரவி, ஜி.கே.எம் தமிழ்குமரன் உள்ளிட்டோர் முக்கிய நட்சத்திரங்கள் ஆவார்கள்.

மீண்டும் ஊர்வசி- ஜெயராம்

2002ல் ‘பஞ்சதந்திரம்’ படத்தில் இணைந்து நடித்த பின், ஜெயராம் – ஊர்வசி ஜோடி மீண்டும் தமிழில் திரையரங்கில் வருவது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர்கள் இருவரும் 25க்கும் மேற்பட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

படத்தின் கதை என்ன?

இந்தப் படம் ஒரு சாதாரண குடும்பம் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்படுவது, அதனைச் சுற்றியுள்ள குழப்பம், நகைச்சுவை, சிரிப்புகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. பாண்டிராஜ் ‘தலைவன் தலைவி’ (விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடித்த படம்) பின் இந்த படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஹோட்டல் அறையில் விடிய விடிய சிறை.. துரந்தர் பட ஆர்ட் டைரக்டருக்கு நிகழ்ந்த கொடுமை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com