Dhurandhar Designer Saini : துரந்தர் படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளர் ஒருவர் மீது ஹரியானா போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.
Dhurandhar Designer Saini : துரந்தர் படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளர் ஒருவர் மீது ஹரியானா போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.

Published on: May 27, 2026 at 2:45 pm
புதுடெல்லி, மே 27, 2026: சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ‘துரந்தர்’ படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளர் சைனி எஸ். ஜோரை மீது பாலியல் தொல்லை மற்றும் தவறான சிறைவைப்பு குற்றச்சாட்டில் சண்டிகர் போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக புகார் அளித்த பெண் டெல்லி மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
இந்தப் புகார் ஏப்ரல் 20, 2026 அன்று அளிக்கப்பட்டுள்ளது; இந்நிலையில், இதுதொடர்பாக, சண்டிகர், செக்டர்-17 போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சைனி எஸ். ஜோர் மீது, பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்) பிரிவுகள் 74, 79, 123, 126(2) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்தப் புகாரில், தொழில்வாரியான சந்திப்பு என்ற பெயரில் அழைத்து, அங்கு பாலியல் தொல்லை மற்றும் தாக்குதல் நடந்ததாக குற்றச்சாட்டில் கூறியுள்ளார். மேலும், ஹோட்டல் அறையில் இரவு முழுவதும் தங்க வற்புறுத்தப்பட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் அளித்த பெண் அசிஸ்டன்ட் ஆர்ட் டைரக்டர் ஆக 2025 செப்டம்பர் 2ஆம் தேதி ‘துரந்தர்’ படத்தில் பணியில் சேர்ந்தவர் ஆவார். அப்போது, சைனி எஸ். ஜோரை தன்னை மென்டார் என அறிமுகப்படுத்தி நம்பிக்கை பெற்றதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தீபிகா படுகோன் நல்ல பெண் என்பது போலி.. சர்ச்சையில் சிக்கிய இம்தியாஸ் அலி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com