Cocaine Haul at Mundra Port : குஜராத்தில் ரூ.1,150 கோடி மதிப்பிலான கோகெய்ன் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Cocaine Haul at Mundra Port : குஜராத்தில் ரூ.1,150 கோடி மதிப்பிலான கோகெய்ன் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Published on: May 27, 2026 at 2:01 pm
ஆமதாபாத், மே 27, 2026: குஜராத் போலீசார் மற்றும் இந்திய கடலோர காவல்படை இணைந்து நடத்தி, முண்ட்ரா துறைமுகம் அருகே 115 கிலோ கோகெய்ன் (மதிப்பு ₹1,150 கோடி) பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நடவடிக்கை, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை முறியடிக்கும் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.
இந்த நடவடிக்கையின் போது, மொத்தம் 115 கிலோ கோகெய்ன் பறிமுதல் செய்யப்பட்டது. இதன், சந்தை மதிப்பு ₹1,150 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில், ஆறு பைகள் கப்பலில் இருந்து கடலில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டன.
கோகெய்ன் சிக்கியது எப்படி?
குஜராத் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைக்கப்பட்டபெற்ற சிறப்பு உளவுத்தகவலின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், முண்ட்ரா துறைமுகத்தின் வெளிப்புற பகுதியில் கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டது. இதற்கிடையில், இரவு நேரத்தில், கப்பலில் இருந்து பைகள் கடலில் வீசப்பட்டதை கவனித்த கடலோர காவல் படை மற்றும் குஜராத் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் குழுவினர் அவற்றை மீட்டனர்.
மூன்று பேர் கைது
இந்த விவகாரத்தில் மூன்று வெளிநாட்டு நபர்கள் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து சாட்லைட் போன் மற்றும் ஆப்பிள் ஏர்டேக் போன்ற உயர் தொழில்நுட்ப சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், போதைப்பொருள் பிரேசில், லத்தீன் அமெரிக்க நாடுகள், மெக்சிகோ, அமெரிக்கா, கராச்சி வழியாக இந்தியாவுக்கு வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் போலீசார் இது கடந்த 5 ஆண்டுகளில் 15வது வெற்றிகரமான போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், சர்வதேச போதைப்பொருள் வலையமைப்புகள் இந்திய கடற்கரை வழியாக நுழைய முயற்சிப்பதை இந்த சம்பவம் வெளிப்படுத்துகிறது.
இதையும் படிங்க : 20 ஆண்டுகள் தண்டனை.. சிறைக்கு வெளியே 436 நாள்கள்.. மீண்டும் குர்மீத் ராம் ரஹீமுக்கு பரோல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com