Hema Malini : நடிகர் தர்மேந்திராவுக்கு அவரது மறைவுக்கு பின்னர் பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டது. அதனை அவரது மனைவி ஹேமமாலினி பெற்றுக் கொண்டார்.
Hema Malini : நடிகர் தர்மேந்திராவுக்கு அவரது மறைவுக்கு பின்னர் பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டது. அதனை அவரது மனைவி ஹேமமாலினி பெற்றுக் கொண்டார்.

Published on: May 27, 2026 at 2:35 pm
புதுடெல்லி, மே 27, 2026: பிரபல நடிகர் தர்மேந்திராவுக்கு மரணத்துக்கு பின் வழங்கப்பட்ட பத்ம விபூஷண் விருதை, அவரது மனைவி ஹேமா மாலினி பெற்றுக்கொண்டார். இந்த தருணம் குடும்பத்திற்கும் ரசிகர்களுக்கும் பெரும் உணர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நடிகை ஹேமமாலினி, “இது எனக்கு பெரும் பெருமை தருணம். தர்மேந்திரா ஜி உண்மையிலேயே இதற்குரியவர். நான் மகிழ்ச்சியுடனும், பெரும் உணர்ச்சி ததும்ப இந்த விருதை பெற்றுக்கொண்டேன். இந்த தருணத்தில் தர்மேந்திரா ஜி என் கையை பிடித்து மேடைக்கு அழைத்துச் சென்றது போல உணர்ந்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.
2026 மே 25 அன்று, ராஷ்டிரபதி மாளிகையில் நடைபெற்ற பத்ம விருது விழாவில், ஜனாதிபதி திரௌபதி முர்மு விருதை வழங்கினார். அப்போது, நடிகை ஹேமா மாலினி, பாஸ்டல் பிங்க் சேலை அணிந்து, மகள் ஆஹனா டியோல் உடன் கலந்து கொண்டார். விருது வழங்கப்பட்டபோது, ஹேமா மாலினி கண்கலங்கிய நிலையில் அதை பெற்றுக்கொண்டார்.
தர்மேந்திரா நடிப்பில், ஷோலே, சுப்கே சுப்கே, சத்யகம், பூல் ஓர் பத்தர் போன்ற படங்கள் அவரது புகழை நிலைநிறுத்தின. அவர் 2025 நவம்பர் 24 அன்று 89 வயதில் மறைந்தார். தர்மேந்திரா, “ஹீ-மேன்” என அழைக்கப்பட்டு, 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : அதர்வாவின் இதயம் முரளி.. ரிலீஸ் எப்போ தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com