‘Idhayam Murali’ Release Date: இளம் நடிகர் அதர்வாவின் நடிப்பில் உருவாகி உள்ள இதயம் முரளி படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.
‘Idhayam Murali’ Release Date: இளம் நடிகர் அதர்வாவின் நடிப்பில் உருவாகி உள்ள இதயம் முரளி படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.

Published on: May 26, 2026 at 8:27 pm
சென்னை, மே 26 2026: தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவரான அதர்வா நடித்து வரும் புதிய திரைப்படம் ‘இதயம் முரளி’. இந்த படத்தை இயக்குநர் ஆகாஷ் பாஸ்கர் இயக்கி வருகிறார்.
காதல் மற்றும் உணர்ச்சிகளை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் அதர்வாவுடன் இணைந்து பிரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி நட்ராஜ், ரக்சன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். மேலும்,
அதர்வாவின் தந்தையும் மறைந்த பிரபல நடிகருமான முரளி ‘இதயம்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களால் “இதயம் முரளி” என அழைக்கப்பட்டார்.
அந்த பெயராள ‘இதயம் முரளி’ என்பதையே இப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இதனால் இப்படத்தின் பெயர் ரசிகர்களிடையே தனி கவனத்தை ஈர்த்துள்ளது.
A ride through love begins in theatres this July💌#IdhayamMurali on the big screens from JULY 10, worldwide ♥️
— DawnPictures (@DawnPicturesOff) May 26, 2026
A film by @AakashBaskaran@Atharvaamurali @MusicThaman @AakashBaskaran @natty_nataraj @PreityMukundan @JustNiharikaNm @11Lohar @manojdft @Dop_Sai @RakshanVJ… pic.twitter.com/pRcewFRpFk
இந்நிலையில், ‘இதயம் முரளி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, இப்படம் வருகிற ஜூலை 10-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதையும் படிங்க : தீபிகா படுகோன் நல்ல பெண் என்பது போலி.. சர்ச்சையில் சிக்கிய இம்தியாஸ் அலி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com