CBSE : சி.பி.எஸ்.இ முறைகேடு விவகாரத்தில் மௌனமாக இருப்பது ஏன் என ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.
CBSE : சி.பி.எஸ்.இ முறைகேடு விவகாரத்தில் மௌனமாக இருப்பது ஏன் என ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.

Published on: May 27, 2026 at 1:45 pm
புதுடெல்லி, மே 27, 2026: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சி.பி.எஸ்.இ 12ஆம் வகுப்பு முடிவுகளில் ஏற்பட்ட “பெரும் முறைகேடு” குறித்து கடும் விமர்சனம் செய்துள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரத்தில் மௌனமாக இருப்பதை “பொறுப்பின்மை” எனக் குற்றம்சாட்டினார். மாணவர்களும் பெற்றோரும் அதிர்ச்சியடைந்த நிலையில், அரசின் பதில் இல்லாமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து ராகுல் காந்தி ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகளில் பெரிய அளவில் தலையீடு நடந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். “மோடி ஜி? எப்போதும் போல — பதில் இல்லை, பொறுப்பு இல்லை, வெட்கம் இல்லையா?” என என்று ராகுல் காந்தி கடுமையாக தாக்கியுள்ளார்.
சி.பி.எஸ்.இ முடிவுகள் தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டு மாணவர்களின் மனநிலையை பாதித்துள்ளது. பெற்றோர்கள், அரசின் விளக்கம் மற்றும் நடவடிக்கை குறித்து எதிர்பார்த்துள்ளனர்.
இதையும் படிங்க : ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறப்பு..பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com