லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 12 பேர் பலி

Israel airStrikes on Lebanon : கிழக்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Published on: May 26, 2026 at 7:44 pm

Updated on: May 26, 2026 at 7:45 pm

பெரூட், மே 26 2026: லெபனானின் கிழக்குப் பகுதியில் உள்ள பெக்கா பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள மஷ்கரா கிராமத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு முன்பாக, ஹெஸ்பொல்லா அமைப்பை குறிவைத்து லெபனான் முழுவதும் தாக்குதல்களை தீவிரப்படுத்த அனுமதி வழங்கியுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தெற்கு மற்றும் கிழக்கு லெபனானில் பல இடங்களில் இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

தாக்குதலுக்குப் பிறகு இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்பு குழுவினர் தேடியபோது 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் நேரடி விளக்கம் அளிக்கவில்லை என்றாலும், கிழக்கு லெபனானில் ஹெஸ்பொல்லா அமைப்பின் கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், லெபனான் மற்றும் இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் இடையிலான நேரடி பேச்சுவார்த்தை இன்னும் மூன்று நாட்களில் வாஷிங்டனில் நடைபெற உள்ள சூழலில் இந்த தாக்குதல் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க : பலூசிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு.. 20 பேர் காயம்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com